- எக்ஸ்டர் ஏழு ட்ரிம்ஸில் வழங்கப்படுகிறது
- இது பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி பவர்ட்ரெயின்ஸில் கிடைக்கிறது
ஹூண்டாய் இறுதியாக இந்தியாவில் புதிய எக்ஸ்டர் எஸ்யுவியை ரூ.6 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாடல் ஏழு ட்ரிம்ஸ் மற்றும் இரண்டு பவர்ட்ரெயின் விருப்பங்களில் வழங்கப்படுகிறது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட எக்ஸ்டரின் டெலிவரி இன்று தொடங்க உள்ளது. இந்தக் கட்டுரையில், இந்தியா முழுவதும் உள்ள சிறந்த 10 நகரங்களில் அதன் ஆன்-ரோடு விலைகளைப் பட்டியலிட்டுள்ளோம்.
ஜூலை 11, 2023 நிலவரப்படி ஹூண்டாய் எக்ஸ்டர் விலை:
நகரங்கள் | எக்ஸ்டரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் |
சென்னை | ரூ. 7.04 லட்சம் - 12.34 லட்சம் |
கோயம்புத்தூர் | ரூ. 7.04 லட்சம் – 12.33 லட்சம் |
பாண்டிச்சேரி (யூனியன் பிரதேசம்) | ரூ. 6.66 லட்சம் – 11.51 லட்சம் |
திருச்சி | ரூ. 7.08 லட்சம் – 12.12 லட்சம் |
பெங்களூர் | ரூ. 7.28 லட்சம் – 12.54 லட்சம் |
ஹைத்ராபாத் | ரூ. 7.27 லட்சம் – 12.53 லட்சம் |
கொச்சி | ரூ. 7.08 லட்சம் – 12.12 லட்சம் |
அஹமதாபாத் | ரூ. 6.71 லட்சம் – 11.28 லட்சம் |
மும்பை | ரூ. 7.10 லட்சம் – 12.05 லட்சம் |
டெல்லி | ரூ. 6.71 லட்சம் – 11.86 லட்சம் |
புதிய ஹூண்டாய் எக்ஸ்டரின் ஃபீச்சர்ஸ்
அம்சங்களைப் பொறுத்தவரை, எக்ஸ்டர் எஸ்யுவியில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே இணைப்புடன் கூடிய எட்டு இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆல்-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் வயர்லெஸ் சார்ஜர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. டூயல் டேஷ் கேமரா, ஃபுட்வெல் லைட்டிங், மெட்டல் பெடல்ஸ், பேடில் ஷிஃப்டர்ஸ், பவர் அவுட்புட் கொண்ட ரியர் ஏசி வென்ட்ஸ், எலக்ட்ரிக் சன்ரூஃப் மற்றும் ஆறு ஏர்பேக்ஸ் போன்ற அம்சங்கள் வழங்கப்படுகின்றது.
ஹூண்டாய் எக்ஸ்டர் பவர்ட்ரெயின் மற்றும் விவரக்குறிப்புகள்
டாடா பஞ்ச்-போட்டியாக இருக்கும் இந்த மைக்ரோ-எஸ்யுவி 82bhp மற்றும் 114Nm டோர்க்கை உற்பத்தி செய்யும் 1.2-லிட்டர் என்ஏ கப்பா பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இந்த மோட்டார் ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஏஎம்டீ யூனிட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், இது தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியண்ட்ஸில் ஃபேக்டரி பொருத்தப்பட்ட சிஎன்ஜி கிட் உடன் இருக்க முடியும். ஃபியூல் எஃபிஷியன்சியைப் பொறுத்தவரை, எக்ஸ்டர் மேனுவலில் லிட்டருக்கு 19.4 கி.மீ, ஏஎம்டீயில் லிட்டருக்கு 19.2 கி.மீ, மற்றும் சிஎன்ஜி வெர்ஷனில் 27.1km/kg தரும் என்று கூறப்படுகிறது.