- இது வென்யூ மற்றும் கிராண்ட் i10 நியோஸ்க்கு கீழே இருக்கும் மாடல் ஆகும்
- டாடா பஞ்ச் மற்றும் சிட்ரோன் C3க்கு போட்டியிடும்
ஹூண்டாய் இந்தியா தனது சிறிய எஸ்யுவியான எக்ஸ்டரை இந்தியாவில் ஆரம்ப விலையாக ரூ.6 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) அறிமுகப்படுத்தியது. இது ஏழு ட்ரிம்ஸில் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி இன்ஜினுடன் வழங்கப்படுகிறது மற்றும் வென்யூ மிட்-சைஸ் எஸ்யுவிக்கு கீழே அமர்ந்திருக்கிறது.
ஹூண்டாய் எக்ஸ்டரின் எக்ஸ்டீரியர்
எக்ஸ்டர் என்பது பிராண்டின் என்ட்ரி-லெவெல் எஸ்யுவி ஆகும் மற்றும் ஃப்ரண்ட் கிரில் மற்றும் டெயில்கேட்டில் 'பாராமெட்ரிக்-ஜூவல்' வடிவமைப்பைக் கொண்டுள்ளது. முதன்முறையாக, 'எக்ஸ்டர்' எழுத்துகள் முன்பக்கத்தில் காணப்படுகின்றன மற்றும் ஹெட்லேம்ப் க்ளஸ்டர்ஸ் பம்பர்-மவுண்ட் செய்யப்பட்டுள்ளது, அதேசமயம் H-வடிவ டிஆர்எல்ஸ் உயரமாகவும், போன்னெட்டிற்கு ஏற்பவும் வைக்கப்பட்டுள்ளது.
எக்ஸ்டரின் ரூஃப் ரெயில்ஸ் மற்றும் ஸ்கொயர் அர்ச்செஸ் மற்றும் 15-இன்ச் அலோய் வீல்ஸ் அதற்கு ஒரு எஸ்யுவி நிலைப்பாட்டைக் கொடுக்கின்றன. அதன் டைமென்ஷன்ஸைப் பொறுத்தவரை, எக்ஸ்டர் 3,815 மி.மீ நீளம், 1,710 மி.மீ அகலம் மற்றும் 1,631 மி.மீ உயரம் கொண்டது. மேலும், மாடலின் வீல்பேஸ் அதன் போட்டியாளர்களை விட 2,450மி.மீ நீளமாக உள்ளது.
ஹூண்டாய் எக்ஸ்டர் இன்டீரியர் மற்றும் அம்சங்கள்
எக்ஸ்டரின் கேபின் ஆரா மற்றும் நியோஸைப் போலவே இருந்தாலும், சில புதிய எலிமெண்ட்ஸ் இதில் உள்ளது. இந்த எக்ஸ்டர் ஆனது 4.2-இன்ச் எம்ஐடி மற்றும் 12 கஸ்டமைசேபிள் மொழிகளுடன் கூடிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டரைப் பெறுகிறது. மேலும், டாஷ்போர்டில் ஹனிகோம்ப் வடிவத்துடன் ஆல்-பிளாக் தீம் மற்றும் வட்ட ஏர்-கண்டிஷனர் வென்ட்ஸில் கான்ட்ராஸ்ட்டிங் ஹைலைட்ஸுடன் இன்டீரியர் பின்பற்றப்படுகிறது.
எக்ஸ்டரில் எலக்ட்ரிக் சன்ரூஃப், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், டாஷ்-மவுண்டட் கேமரா, இணைக்கப்பட்ட கார் டெக்னாலஜி, க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேக்கான இணைப்புடன் கூடிய 8-இன்ச் டச்ஸ்கிரீன் யூனிட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
ஹூண்டாய் எக்ஸ்டர் இன்ஜின் விருப்பங்கள்
எக்ஸ்டர் 1.2-லிட்டர் பெட்ரோல் இன்ஜினைப் பயன்படுத்துகிறது, இது கிராண்ட் i10 நியோஸ், ஆரா மற்றும் வென்யூ ஆகியவற்றிலும் கடமைகளைச் செய்கிறது. இது 82bhp மற்றும் 114Nm டோர்க்கை உற்பத்தி செய்ய டியூன் செய்யப்பட்டுள்ளது மற்றும் ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஏஎம்டீ யூனிட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், மேனுவல் கியர்பாக்ஸுடன் சிஎன்ஜி வேரியண்ட்டிலும் வழங்கப்படுகிறது.
ஹூண்டாய் எக்ஸ்டர் போட்டியாளர்கள்
ஹூண்டாய் எக்ஸ்டரின் முதன்மை போட்டியாளர்கள் - டாடா பஞ்ச், சிட்ரோன் C3 மற்றும் மாருதி சுஸுகி இக்னிஸ். எக்ஸ்டரின் வேரியண்ட் வாரியான எக்ஸ்-ஷோரூம் விலைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
வேரியண்ட்ஸ் | எக்ஸ்-ஷோரூம் விலைகள் |
EX | ரூ. 5.99 லட்சம் |
S | ரூ. 7.27 லட்சம் |
SX | ரூ. 7.99 லட்சம் |
SX (O) | ரூ. 8.64 லட்சம் |
SX (O) கனெக்ட் | ரூ. 9.32 லட்சம் |
சிஎன்ஜி | ரூ. 8.24 லட்சம் |
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்
ஹூண்டாய் எக்ஸ்டர் வீடியோ
மேலும் இது போன்ற வீடியோஸைப் பார்க்க கார்வாலே யூடியூப் சேனலுக்கு சப்ஸ்கிரைப் செய்யவும்