- இது மூன்று வேரியன்ட்ஸில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
- ஸ்பேர் வீல் வழங்கப்படாது
ஹூண்டாய் இந்தியா சமீபத்தில் அறிமுகப்படுத்திய டூயல் சிஎன்ஜி சிலிண்டர் டெக்னாலஜி கொண்ட மாடலின் டெலிவரி தொடங்கியது. நிறுவனம் இந்த மாடலை S, SX மற்றும் SX நைட் எடிஷன் உள்ளிட்ட மூன்று வேரியன்ட்ஸில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் பேஸ் வேரியன்ட்டின் ஆரம்ப விலை ரூ. 8.5 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). ஆர்வமுள்ள வாடிக்கையாளர் தங்களுக்கு அருகிலுள்ள ஹூண்டாய் அங்கீகரிக்கப்பட்ட டீலரை தொடர்பு கொள்ளலாம்.
டாடாவைப் போலவே, ஹூண்டாய் நிறுவனமும் டூயல் சிலிண்டர் டெக்னாலஜி அடிப்படையில் தனது முதல் மாடலான எக்ஸ்டர் ஐ அறிமுகப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டெக்னாலஜியைப் பயன்படுத்தி, நிறுவனம் இப்போது 60 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு சிலிண்டருக்குப் பதிலாக 30-30 லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு சிஎன்ஜி சிலிண்டர்களை வழங்கியுள்ளது. ஏனெனில் இந்த இரண்டு சிலிண்டர்களும் பூட்டின் அடியில் பொருத்தப்பட்டிருக்கும்.
அத்தகைய சூழ்நிலையில், உங்கள் பூட் ஸ்பேஸ் பாதுகாப்பாக இருக்கும் மற்றும் நீங்கள் அதை முழுமையாகப் பயன்படுத்தலாம். இது தவிர, இந்த மாடலில் ஸ்பேர் வீலுக்கு பதிலாக பஞ்சர் கிட் ஒன்றையும் நிறுவனம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இது பூட் ஸ்பேஸ் பிரச்சனையிலிருந்து நமக்கு ஒரு நிம்மதியளிக்கும்.
இயந்திர ரீதியாக, எக்ஸ்டரில் 1.2-லிட்டர் ஃபோர்-சிலிண்டர் என்ஏ பெட்ரோல் இன்ஜினில் உள்ளது, இது ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் விருப்பங்களுடன் வழங்கப்படுகிறது. இருப்பினும், சிஎன்ஜி பதிப்பில், இந்த கார் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் மட்டுமே வழங்கப்படுகிறது. டூயல் சிஎன்ஜி சிலிண்டர் டெக்னாலஜி கொண்ட இந்த மாடல், சிஎன்ஜி மோடில் ஒரு கிலோவுக்கு 27.1 கிமீ மைலேஜ் தரும் என்று நிறுவனம் தெரிவித்தது.
மொழிபெயர்த்தவர்- ஐசக் தீபன்