- மூன்று வேரியன்ட்ஸில் வழங்கப்படுகிறது
- எக்ஸ்டர் சிஎன்ஜி வேரியன்ட்ஸில் மூன்று வருட உத்தரவாதம்
ஹூண்டாய் இந்தியா தனது புதுமையான ட்வின் சிலிண்டர் சிஎன்ஜி டேங்க் டெக்னாலஜி உடன் டாடா மோட்டார்ஸின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி இந்தியாவில் எக்ஸ்டர்க்கு இதேபோன்ற சிஎன்ஜி வெர்ஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. எக்ஸ்டர் சிஎன்ஜி ஆரம்ப விலையில் ரூ. 8.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்), மூன்று வேரியன்ட்ஸில் - S, SX மற்றும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட SX நைட் எடிஷன் ஆகும்.
இயந்திர ரீதியாக, இந்த புதிய சிஎன்ஜி வெர்ஷன் ஆனது 1.2-லிட்டர் என்ஏ பெட்ரோல் இன்ஜினிலிருந்து ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்ட பவரை தொடர்ந்து வழங்குகிறது. இருப்பினும், ஒரு சிஎன்ஜி சிலிண்டர் பொருத்துதல் போலல்லாமல், ட்வின் சிஎன்ஜி விருப்பங்களுக்கிடையில் தடையற்ற மாற்றத்திற்காக ஒருங்கிணைந்த இசியூவுடன் சிஎன்ஜிக்கு இரண்டு டேங்க்களைப் பெறுகிறது. இந்த ட்யூன் நிலையில், 60 லிட்டர் சிஎன்ஜி திறன் கொண்ட ஒரு கிலோவுக்கு 27.1கிமீ என்ற ஃபியூல் எஃபிஷியன்சியை எக்ஸ்டர் வழங்க முடியும்.
எக்ஸ்டர் ஹை-சிஎன்ஜி அறிமுகம் குறித்து ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் தருண் கர்க் கூறுகையில், “ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிலையான மற்றும் புதுமையான மொபிலிட்டி தீர்வுகளை வழங்க உறுதிபூண்டுள்ளது. டூயல்-சிலிண்டர் சிஎன்ஜி தொழில்நுட்பத்துடன் எங்களது என்ட்ரி எஸ்யுவி எக்ஸ்டர் ஐ அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அதிக ஃபியூல்எஃபிஷியன்சி, போதிய பூட் ஸ்பேஸ் மற்றும் எஸ்யுவியின் பல்துறை சலுகைகள் ஆகியவற்றுடன், எக்ஸ்டர் ஹை-சிஎன்ஜி வாடிக்கையாளர்களின் கார்பன் தடயத்தைக் குறைக்கும் மற்றும் அவர்களின் ஆய்வு விருப்பத்தை நிறைவேற்றும் நம்பகமான மற்றும் திறமையான வாகனத்தைத் தேடும் என்று நாங்கள் நம்புகிறோம்' என்று கூறினார்.
ஹூண்டாய் எக்ஸ்டர் சிஎன்ஜி வேரியன்ட் வாரியான விலைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
வேரியன்ட்ஸ் | எக்ஸ்-ஷோரூம் விலை |
S | ரூ. 8,50,300 |
SX | ரூ. 9,23,300 |
SX நைட் எடிஷன் | ரூ. 9,38,200 |
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்