மிட்-சைஸ் எஸ்யுவி செக்மெண்ட் தற்போது நாட்டில் அதிகம் விற்பனையாகும் பிரிவாக உள்ளது, குறிப்பாக வசதியுடன் நீண்ட தூரம் பயணிக்க விரும்புபவர்கள் மத்தியில். மேலும் இந்த தேவையை பூர்த்தி செய்யும் வகையில், கவர்ச்சிகரமான பொருட்களை இந்திய மார்க்கெட்க்கு கொண்டு வர உற்பத்தியாளர்கள் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றனர். தென் கொரிய வாகன உற்பத்தியாளரான, ஹூண்டாய், சமீபத்தில் எக்ஸ்டரை ஆரம்ப விலை ரூ.6 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) அறிமுகப்படுத்தியது. இப்போது இந்த இரண்டு எஸ்யுவிஸும் அந்தந்தப் செக்மெண்ட்ஸில் ஒருவருக்கொருவர் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் பார்ப்போம்.
டைமென்ஷன்ஸ் ஒப்பீடுகை
பராமீட்டர்ஸ் | ஹூண்டாய் எக்ஸ்டர் | சிட்ரோன் C3 |
நீளம் | 3815 மி.மீ | 3981 மி.மீ |
அகலம் | 1710 மி.மீ | 1733 மி.மீ |
உயரம் | 1631 மி.மீ | 1586 மி.மீ |
வீல்பேஸ் | 2450 மி.மீ | 2540 மி.மீ |
க்ரவுண்ட் க்ளியரன்ஸ் | 185 மி.மீ | 180 மி.மீ |
பூட் ஸ்பேஸ் | 391லிட்டர் | 315 லிட்டர் |
ஃபியூல் டேங்க் கபாஸிட்டி | 37 லிட்டர் | 30L லிட்டர் |
உயரம், க்ரவுண்ட் க்ளியரன்ஸ், பூட் ஸ்பேஸ் மற்றும் ஃபியூல் டேங்க் அளவு ஆகியவற்றின் அடிப்படையில் எக்ஸ்டர் ஆனது சிட்ரோன் C3-ஐ கையகப்படுத்துகிறது. மறுபுறம், சிட்ரோன் C3, 166 மி.மீ நீளம், 23 மி.மீ அகலம் மற்றும் 90 மி.மீ வீல்பேஸ் ஆகியவற்றை அதிக அளவிடுகிறது.
எக்ஸ்டர் மற்றும் சிட்ரோன் C3 இன் இன்டீரியர்
இன்டீரியரைப் பொறுத்தவரை, ஹூண்டாய் வேரியண்ட்டைப் பொறுத்து தேர்வு செய்ய மூன்று வெவ்வேறு இன்டீரியர் தீம்ஸில் வழங்கபடுகிறது.இது தவிர, வயர்லெஸ் மொபைல் இணைப்புடன் 8 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், 4.2இன்ச் வண்ண எம்ஐடி14மொழிகளை ஆதரிக்கும்-, வாய்ஸ்-எனேபிள்ட் சன்ரூஃப், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், ஃபுட்வெல் லைட்ஸ், பேடில் ஷிஃப்டர்ஸ் மற்றும் ப்ளூலிங்க்-கனெக்டிவிட்டி கார் டெக்னாலஜி ஆகியவற்றைப் பெறுகிறது.
மறுபுறம், சிட்ரோன் C3 யில் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உடன் 10-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கீலெஸ் என்ட்ரி, நான்கு ஸ்பீக்கர்ஸ், ஸ்டீயரிங் பொருத்தப்பட்ட கண்ட்ரோல்ஸ், ரியர் பார்க்கிங் கேமரா மற்றும் வாஷருடன் கூடிய ரியர் வைப்பர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
சேஃப்டி மற்றும் ஃபீச்சர்ஸ்
ஹூண்டாய் எக்ஸ்டரில் உள்ள ஸ்டாண்டர்ட் சேஃப்டி பட்டியலில் எலக்ட்ரோனிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், வெஹிகல் ஸ்டெபிலிட்டி மேனேஜ்மென்ட், ஹில் அசிஸ்ட் கன்ட்ரோல் மற்றும் இபிடி உடன் ஏபிஎஸ் ஆகியவை அடங்கும். மேலும், பர்க்லர் அலாரம், த்ரீ-பாயிண்ட் சீட் பெல்ட், சீட்பெல்ட் ரிமைன்டர், கீலெஸ் என்ட்ரி மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்ஸ் போன்ற அம்சங்களும் இந்த தொகுப்பின் ஒருங்கிணைந்த பகுதியாகும். மேலும், ஹூண்டாய் அனைத்து வேரியண்ட்ஸிலும் டூயல் கேமராஸ், டீபீஎம்எஸ் மற்றும் ஆறு ஏர்பேக்ஸுடன் கூடிய ஃபர்ஸ்ட்-இன்-கிளாஸ் டேஷ்கேமையும் வழங்குகிறது.
ஒப்பிடுகையில், சிட்ரோன் C3 ஆனது ஃப்ரண்ட் ஏர்பேக்ஸ், இபிடி உடன் ஏபிஎஸ், சென்சார் கொண்ட ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, முன் சீட்ஸ்க்கான சீட் பெல்ட் ரிமைன்டர், இன்ஜின் இம்மோபிலைசர், இஎஸ்பீ, ஹில் ஹோல்ட் அசிஸ்ட் மற்றும் டீபீஎம்எஸ் ஆகியவற்றைப் பெறுகிறது.
இன்ஜின் மற்றும் விவரக்குறிப்புகள்
எக்ஸ்டரை 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல்-சிஎன்ஜி இன்ஜின்ஸில் வைத்திருக்கலாம். பெட்ரோல் மில் 82bhp மற்றும் 114Nm டோர்க்கை உருவாக்குகிறது, மறுபுறம் சிஎன்ஜி இன்ஜின் 68bhp மற்றும் 95Nm டோர்க்கை உற்பத்தி செய்ய டியூன் செய்யப்பட்டுள்ளது. இரண்டு இன்ஜின்ஸும் ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருந்தாலும், ப்யூர் பெட்ரோல் மில் ஏஎம்டீ யூனிட்டுடன் இருக்கலாம். ஹூண்டாய் நிறுவனம் ஏஆர்ஏஐ-சோதனை செய்த மைலேஜ் லிட்டருக்கு 19.4 கி.மீ மற்றும் ஏஎம்டீக்கு 19.2 கி.மீ மைலேஜ் வழங்குகிறது. மேலும் சிஎன்ஜி வெர்ஷன்க்கு, எக்ஸ்டரின் மைலேஜ் கிலோவுக்கு 27.1 கி.மீ ஆகும்.
மறுபுறம், சிட்ரோன் C3, 1.2 லிட்டர் என்ஏ பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. என்ஏ பெட்ரோலில் 81bhp மற்றும் 115Nm டோர்க்கை உற்பத்தி செய்கிறது மற்றும் ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் யூனிட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது, டர்போ-பெட்ரோலில் 109bhp மற்றும் 190Nm டோர்க்கை உருவாக்குகிறது மற்றும் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளது. இரண்டு இன்ஜின்ஸும் லிட்டருக்கு 19.3 கி.மீ மைலேஜை வழங்குகின்றன.
வேரியண்ட்ஸ் மற்றும் வண்ணங்கள்
EX, EX(O), S, S(O), SX, SX(O), மற்றும் SX(O) கனெக்ட் உள்ளிட்ட ஏழு வேரியண்ட்ஸில் எக்ஸ்டரைக் கொண்டிருக்கலாம். காஸ்மிக் ப்ளூ மற்றும் ரேஞ்சர் காக்கி ஆகிய இரண்டு புதிய பிரத்யேக வண்ணங்கள் உடன் ஆறு மோனோடோன் மற்றும் மூன்று டூயல்-டோன் எக்ஸ்டீரியர் வண்ண விருப்பங்களிலிருந்து ஃபைவ்-சீட்டர் கொண்ட எஸ்யுவியை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யலாம். மோனோடோன் விருப்பங்களில் அட்லஸ் ஒயிட், காஸ்மிக் ப்ளூ, ஃபையரி ரெட், ரேஞ்சர் காக்கி, ஸ்டார்ரி நைட் மற்றும் டைட்டன் க்ரே ஆகியவை அடங்கும். மறுபுறம், டூயல்-டோனில் அட்லஸ் ஒயிட், காஸ்மிக் ப்ளூ மற்றும் அபிஸ் பிளாக் கொண்ட ரேஞ்சர் காக்கி ஆகியவை அடங்கும்.
இதற்கிடையில், சிட்ரோன் C3 மூன்று வேரியண்ட்ஸில் கிடைக்கிறது, இதில் லைவ், ஃபீல் மற்றும் ஷைன் ஆகியவை நான்கு மோனோடோன் மற்றும் ஆறு டூயல்-டோன் வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. இதில் போலார் ஒயிட், ஜெஸ்டி ஆரஞ்சு, பிளாட்டினம் க்ரே, ஸ்டீல் க்ரே, ஜெஸ்டி ஆரஞ்சு ரூஃப் உடன் போலார் ஒயிட், வித் ஜெஸ்டி ஆரஞ்சு ரூஃப் உடன் பிளாட்டினம் க்ரே, பிளாட்டினம் க்ரே ரூஃப் உடன் போலார் ஒயிட், ஜெஸ்டி ஆரஞ்சு ரூஃப் உடன் ஸ்டீல் க்ரே, பிளாட்டினம் க்ரே ரூஃப் உடன் ஜெஸ்டி ஆரஞ்சு, பிளாட்டினம் க்ரே ரூஃப் உடன் ஸ்டீல் க்ரே.
ஒப்பிடப்பட்ட விலைகள்
இரண்டு எஸ்யுவிஸின் வேரியண்ட் வாரியான எக்ஸ்-ஷோரூம் விலைகள் பின்வருமாறு.
வேரியண்ட்ஸ் | எக்ஸ்டர் | சிட்ரோன் C3 | வேரியண்ட்ஸ் | ||
EX எம்டீ | ரூ. 5,99,900 | ரூ. 6,16,000 | லைவ் | ||
EX(O) எம்டீ | ரூ. 6,24,900 | ரூ. 7,08,000 | ஃபீல் | ||
S எம்டீ | ரூ. 7,26,990 | ரூ. 7,23,000 | ஃபீல் டூயல் டோன் | ||
S(O) எம்டீ | ரூ. 7,41,990 | ரூ. 7,23,000 | ஃபீல் வைப் பேக் | ||
S சிஎன்ஜி | ரூ. 8,23,990 | ரூ. 7,38,000 | ஃபீல் வைப் பேக் டூயல் டோன் | ||
S ஏஎம்டீ | ரூ. 7,96,980 | ரூ. 7,60,000 | ஷைன் | ||
SX எம்டீ | ரூ. 7,99,990 | ரூ. 7,72,000 | ஷைன் வைப் பேக் | ||
SX எம்டீ டூயல் டோன் | ரூ. 8,22,990 | ரூ. 7,75,000 | ஷைன் டூயல் டோன் | ||
SX சிஎன்ஜி | ரூ. 8,96,990 | ரூ. 7,87,000 | ஷைன் வைப் பேக் டூயல் டோன் | ||
SX(O) எம்டீ | ரூ. 8,63,990 | ரூ. 8,28,000 | ஃபீல் டர்போ டூயல் டோன் | ||
SX ஏஎம்டீ | ரூ. 8,67,990 | ரூ. 8,43,000 | ஃபீல் டர்போ வைப் பேக் டூயல் டோன் | ||
SX ஏஎம்டீ டூயல்-டோன் | ரூ. 8,90,990 | ரூ. 8,80,000 | ஷைன் டர்போ டூயல் டோன் | ||
SX(O) ஏஎம்டீ | ரூ. 9,31,990 | ரூ. 8,92,000 | ஷைன் டர்போ வைப் பேக் டூயல் டோன் | ||
SX(O) கனெக்ட் எம்டீ | ரூ. 9,31,990 | ||||
SX(O) கனெக்ட் எம்டீ டூயல் டோன் | ரூ. 9,41,990 | ||||
SX(O) கனெக்ட் ஏஎம்டீ | ரூ. 9,99,990 | ||||
SX(O) கனெக்ட் ஏஎம்டீ டூயல் டோன் | ரூ. 10,09,990 |
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்