- 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி ஆகிய இரண்டு விருப்பங்களும் கொண்டது
- ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஃபைவ்-ஸ்பீட் ஆட்டோமேடெட் மேனுவல் டிரான்ஸ்மிஷன்
விவரக்குறிப்புகள்
ஹுண்டாய் கிராண்ட் i10 நியோஸ் மற்றும் ஆராவில் உள்ள 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் 82bhp பவரையும் 114Nmடோர்கையும் உற்பத்தி செய்கிறது, இது ஃபைவ்-ஸ்பீட் கியர்பாக்ஸ் அல்லது ஃபைவ்-ஸ்பீட் ஆட்டோமேடெட் மெனுவல் உடன் வருகிறது. இதே இன்ஜின் மற்றும் இதே பவர் தான் இந்த எக்ஸ்டர்ரிலும் உள்ளது. அதன் போட்டியாளர் டாடா பஞ்ச், அதே 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் 84bhp பவர் மற்றும் 115Nm டோர்கையும் உற்பத்தி செய்கிறது இது ஃபைவ்-ஸ்பீட் கியர்பாக்ஸ் அல்லது ஃபைவ்-ஸ்பீட் ஆட்டோமேடெட் மெனுவல் உடன் வருகிறது, இதில் இருந்து என்ன தெரியுது இந்த இரண்டுக்குமே கடுமையான போட்டி இருக்கும் என்று நினைக்க படுகிறது.
சிஎன்ஜி பவர்
ஹுண்டாய் எக்ஸ்டர் மற்றும் டாடா பஞ்ச்சின் இன்ஜின் ஒரே மாதிரி இருப்பதால், இதில் பஞ்ச்-ஃபார்-பஞ்ச் என்ற விதிமுறையில் சிஎன்ஜி வெர்ஷன் வழங்கப்படும். ஹுண்டாய் எக்ஸ்டர் 68bhpபவர் மற்றும்95Nmடோர்க்கை உற்பத்தி செய்கிறது மற்றும் இதில் ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் உடன் வழங்கபடும். டாடா பஞ்ச் சிஎன்ஜியில் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மூலம் 76bhp பவர் மற்றும்97Nmடோர்க்கை உற்பத்தி செய்கிறது, இது ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் வெர்ஷனில் மட்டுமே வழங்கபடும்.
ஏஆர்ஏஐ மைலேஜ்
தற்போதைய நிலவரப்படி, BS6 2 அப்கிரேட் காரணமாக ஹூண்டாய் 1.2-பெட்ரோல் இன்ஜின்க்கான ஏஆர்ஏஐ புள்ளிவிவரங்கள் எதுவும் இல்லை, ஆனால் இந்த புள்ளிவிவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளன. பெட்ரோல் வெர்ஷனில் லிட்டருக்கு 21-23 கி.மீ மைலேஜையும், சிஎன்ஜி வெர்ஷனில் லிட்டருக்கு 26 கி.மீ மைலேஜையும் எதிர்பார்க்கிறோம். சிஎன்ஜி டேங்க் 65 லிட்டர் ஆகும், இது எக்ஸ்டர் சிஎன்ஜிக்கு மாறாமல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லாஞ்ச் மற்றும் விலை
எக்ஸ்டர் இந்த ஆண்டின் மத்தியில் ரூ. 6 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கிறோம். டாடா பஞ்ச்சின் விலை ரூ.6 லட்சத்தில் இருந்து ரூ. 8.45 லட்சம் வரை மற்றும் சிஎன்ஜி வெர்ஷன்ஸ்க்கு தனியாக ரூ.75,000 வரை செல்கிறது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்