- இந்தியாவில் இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 11 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது
- N லைன் வேரியன்ட்டிலும் கிடைக்கிறது
இந்த ஆண்டு ஜனவரி 16 அன்று நாட்டில் 2024 ஹூண்டாய் க்ரெட்டாவை லான்ச் செய்தது. கியா செல்டோஸுக்கு போட்டியாக இருக்கும் இந்த கார் 80,000 முன்பதிவுகளை கடந்துள்ளது. கூடுதலாக, பிராண்ட் சமீபத்தில் 2015 இல் அறிமுகப்படுத்தப்பட்ட க்ரெட்டா எஸ்யுவியின் 1 மில்லியன் யூனிட்களை விற்பனை செய்து புதிய சாதனையை படைத்தது.
ஹூண்டாய் க்ரெட்டா E, EX, S, S(O), SX, SX டெக் மற்றும் SX(O) ஆகிய ஏழு வேரியன்ட்ஸில் கிடைக்கிறது. இந்த ஐந்து சீட்டர் எஸ்யுவியில் வாடிக்கையாளர்கள் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் விருப்பங்களில் ஆறு சிங்கிள் மற்றும் ஒரு டூயல்-டோன் வண்ண விருப்பங்களை தேர்வு செய்யலாம். இதில் 1.5 லிட்டர் என்ஏ பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின்கள் அடங்கும். டிரான்ஸ்மிஷன் விருப்பங்களில் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல், சிக்ஸ்-ஸ்பீட் ஐவிடீ, சிக்ஸ்-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் மற்றும் செவன்-ஸ்பீட் டிசிடீ யூனிட் ஆகியவை அடங்கும்.
சமீபத்தில் கார் உற்பத்தியாளர் இந்த எஸ்யுவியின் பர்ஃபார்மன்ஸ் வெர்ஷன்னை அறிமுகப்படுத்தியது, இதற்கு க்ரெட்டா N லைன் என்று பெயரிடப்பட்டது. இந்த எஸ்யுவி N8 மற்றும் N10 ஆகிய இரண்டு வேரியன்ட்ஸில் கிடைக்கிறது. இதில் 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் உள்ளது, இது 158bhp மற்றும் 253Nm டோர்க்கையும் உருவாக்குகிறது. வாடிக்கையாளர்கள் டோக்கன் தொகையாக ரூ. 25,000 செலுத்தி N லைனை வெர்ஷனை முன்பதிவு செய்யலாம், இதன் எக்ஸ்ஷோரூம் விலை ரூ. 16.82 லட்சத்தில் தொடங்குகிறது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்