- க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட்டில் இதுவரை 60,000 முன்பதிவுகளைப் பதிவு செய்துள்ளது
- இந்தியாவில் இதன் விலை 11 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது
ஹூண்டாய் மோட்டார் இந்தியா தனது ஃபைவ்-சீட்டர் எஸ்யுவி க்ரெட்டாவை நாட்டில் 10 லட்சம் யூனிட்களின் விற்பனையை கடந்துள்ளதாக அறிவித்துள்ளது. க்ரெட்டா முதன்முதலில் 2015 இல் அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் இது எட்டு ஆண்டுகளில் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மிட்-சைஸ் எஸ்யுவிகளில் ஒன்றாக மாறியுள்ளது. கார் தயாரிப்பு நிறுவனம் 2.8 லட்சத்திற்கும் அதிகமான க்ரெட்டாவை இதுவரை எக்ஸ்போர்ட் செய்துள்ளது.
கியா செல்டோஸுடன் போட்டியிடும் க்ரெட்டா, பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் விருப்பங்களுடன் ஏழு வேரியன்ட்ஸில் வாங்கப்படலாம். இதன் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 11 லட்சம் மற்றும் இது மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா ஹைரைடர், ஹோண்டா எலிவேட், ஸ்கோடா குஷாக் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் போன்றவற்றுடன் போட்டியிடுகிறது.
இந்த நிகழ்வில், ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் சிஓஓ தருண் கார்க் கூறுகையில், “ஹூண்டாய் க்ரெட்டா இந்திய வாடிக்கையாளர்களின் இதயங்களை ஆளும் பிராண்டாக இருந்து வருகிறது. இது ஒரு மில்லியனுக்கும் அதிகமான க்ரெட்டாக்கள் இந்திய சாலைகளில் காணப்படுகின்றன, இது 'க்ரெட்டா' ஒரு பிராண்ட் எஸ்யுவியாக முத்திரை பதித்துள்ளது என்பதைக் காட்டுகிறது. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் வாடிக்கையாளர்களிடமிருந்து அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது மற்றும் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இதுவரை 60,000 க்கும் மேற்பட்ட முன்பதிவுகளைப் பெற்றுள்ளது. க்ரெட்டா மீது எங்கள் வாடிக்கையாளர்கள் காட்டிய அன்பு மற்றும் நம்பிக்கைக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்” என்று அவர் கூறினார்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்