- பெட்ரோல் மற்றும் டீசல் வெர்ஷனில் வழங்கப்படும்
- வரும் வாரங்களில் அறிமுகப்படுத்தலாம்
பாரம்பரிய மிட்-சைஸ் எஸ்யுவி செக்மெண்ட்க்கு போட்டியாக சில கூபே எஸ்யுவிகளின் வருகையுடன், ஹூண்டாய் க்ரெட்டாவிற்கான புதுப்பிப்பில் வேலை செய்யும் என நம்பப்படுகிறது. கொரிய பிராண்டின் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மாடலின் ஸ்பெஷல் எடிஷன் விரைவில் வெளியிடப்படலாம் என்று அதிகாரப்பூர்வ ஆவணங்கள் வெளிப்படுத்துகின்றன.
ஆவணங்களின்படி, க்ரெட்டா SE அல்லது ஸ்பெஷல் எடிஷன், S (O) மற்றும் SX(O) என இரண்டு வேரியன்ட்ஸில் வழங்கப்படும். இதன் முழு விவரங்கள் தெரியவில்லை என்றாலும், இந்த ஸ்பெஷல் எடிஷன் வெளிப்புறத்திலும் உட்புறத்திலும் சிறிய மாற்றங்களைப் பெறலாம்.
புதிய க்ரெட்டா SE 1.5 லிட்டர், என்ஏ பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டர்போ-டீசல் இன்ஜின் விருபங்களில் கிடைக்கும். டிரான்ஸ்மிஷன் விருப்பங்களில் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல், ஐவிடீ மற்றும் சிக்ஸ்-ஸ்பீட் டோர்க் கன்வர்டர் ஆட்டோமேட்டிக் யூனிட்டுடன் அடங்கும். இந்த மாடலின் அறிமுகம், நடந்து வரும் பண்டிகைக் காலத்தில் க்ரெட்டாவின் விற்பனையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்