- 71 சதவீத கஸ்டமார் சன்ரூஃப் வேரியன்ட்டை தேர்ந்தெடுத்துள்ளனர்
- க்ரெட்டா ஜனவரி 2024 இல் லான்சானது
அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று மாதங்களில், 2024 க்ரெட்டா ஒரு பெரிய மைல்ஸ்டோன்னை எட்டியது, இந்த கொரிய வாகன உற்பத்தியாளரிடமிருந்து மிகவும் பிரபலமான எஸ்யுவி என்பதை நிரூபித்து மார்க்கெட்டில் வெற்றிகரமாக முன்னேறியது. இந்த மிட்-சைஸ் எஸ்யுவி வாகன உற்பத்தியாளரால் ஜனவரி 2024 இல் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து ஒரு லட்சத்திற்கும் அதிகமான முன்பதிவுகளை பதிவு செய்துள்ளது.
விற்பனை மற்றும் முன்பதிவு சாதனைகளை முறியடிக்கும் பட்டியலில் க்ரெட்டா முதலிடத்தில் உள்ளது. இந்த எஸ்யுவி பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் முறையே 50,000 மற்றும் 80,000 முன்பதிவுகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. க்ரெட்டாவின் போட்டியாளரான கியா செல்டோஸ் அதே மைல்ஸ்டோன்னை அடைய ஆறு மாதங்கள் எடுத்தது.
ரூ. 11 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் வெளியிடப்பட்ட க்ரெட்டா எஸ்யுவி தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களுடன் E, EX, S, S(O), SX, SX டெக் மற்றும் SX(O) ஆகிய 7 வேரியன்ட்ஸில் கிடைக்கிறது. மேலும் என்னவென்றால், இந்த மாடல் சமீபத்தில் முதல் முறையாக ரூ. 10,800 விலை உயர்வை பெற்றது.
மற்ற செய்திகளில், கொரிய வாகன உற்பத்தியாளர் இந்தியாவிலும் க்ரெட்டா எஸ்யுவியின் ஃபுல்-எலக்ட்ரிக் வெர்ஷன்னை அறிமுகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார். ஹூண்டாய் சமீபத்தில் இந்த மாடலை தொடர்ந்து சோதனை செய்து வரும் நிலையில் உள்ளது, இது 2024 இன் பிற்பகுதியில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட்டின் சிஓஓ தருண் கார்க் கருத்துத் தெரிவிக்கையில், 'சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ஹூண்டாய் க்ரெட்டாவிற்கும் 2024 ஜனவரியில் அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று மாதங்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான முன்பதிவுகளுடன் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. சன்ரூஃப் மற்றும் கனெக்டெட் கார் வேரியன்ட்ஸ் முறையே 71 சதவிகிதம் மற்றும் 52 சதவிகிதம் ஆகியவை ஒட்டுமொத்த முன்பதிவுகளில் பங்களிக்கின்றன, இது இளம் இந்திய வாடிக்கையாளர்களின் மாறிவரும் அபிலாஷைகளுக்கு ஒரு சான்றாகும்” என்று கூறினார்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்