- இந்தியாவில் க்ரெட்டாவின் விலை ரூ. 10.87 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது
- புதிய க்ரெட்டா ஜனவரி 16 ஆம் தேதி லான்ச் செய்யப்படும்
சில ஹூண்டாய் டீலர்கள் இந்த மாதம் தங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புகளுக்கு பெரும் தள்ளுபடியை வழங்குகிறார்கள். இந்த சலுகைகளை ஜனவரி 31 வரை பெறலாம், இதில் கேஷ் தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடி ஆகியவை அடங்கும்.
ஹூண்டாய் க்ரெட்டா ரூ. 50,000 வரை கேஷ் தள்ளுபடியில் கிடைக்கிறது. ஏற்கனவே விற்பனை செய்யப்படும் மாடல்களில் மட்டுமே இந்த சலுகை கிடைக்கும். இம்மாதம் 16 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ள புதிய ஃபேஸ்லிஃப்ட் பதிப்பில் இந்த சலுகை பொருந்தாது.
க்ரெட்டா 1.5 லிட்டர், என்ஏ பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜினுடன், சிக்ஸ் ஸ்பீட் மேனுவல், ஆட்டோமேட்டிக் யூனிட் மற்றும் சிவடீ யூனிட்களின் தேர்வுடன் வழங்கப்படுகிறது. இந்த மிட்-சைஸ் எஸ்யுவியின் எலக்ட்ரிக் வெர்ஷனிலும் கார் தயாரிப்பாளர் வேலை செய்து வருகிறார், அதன் விவரங்கள் எங்கள் இணையதளத்தில் உள்ளன.
2024 ஹூண்டாய் க்ரெட்டாவின் விலைகள் ஜனவரி 16 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று உங்களுக்குச் சொல்கிறோம். இந்த மாடலில் சில மேம்படுத்தல்கள், சில அம்ச மாற்றங்கள் மற்றும் புதிய 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அறிமுகப்படுத்தப்பட்டதும், இது கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா, ஹோண்டா எலிவேட், எம்ஜி ஆஸ்டர், ஃபோக்ஸ்வேகன் டைகுன் மற்றும் ஸ்கோடா குஷாக் போன்றவற்றுடன் போட்டியிடும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்