- க்ரெட்டா N-லைன் புதிய 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின்னை பெறலாம்
- N8 மற்றும் N10 வேரியன்ட்ஸில் வழங்கப்பட வாய்ப்புள்ளது
2024 க்ரெட்டாவின் அறிமுகத்துடன், ஹூண்டாய் நிறுவனம் க்ரெட்டாவின் பர்ஃபார்மன்ஸ் காரான N-லைன் எஸ்யுவியை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்த ஸ்போர்ட்டியர் பதிப்பு புதிய வண்ணம், N லைன் பேட்ஜிங் மற்றும் பல புதுப்பிப்புகளுடன் டீவிசி படப்பிடிப்பில் காணப்பட்டது.
க்ரெட்டா N லைன்: எக்ஸ்டீரியர்
ஹூண்டாய் நிறுவனம் க்ரெட்டான் வரிசையை புதிய மேட் க்ரே நிறத்தில் தண்டர் ப்ளூவுடன் வழங்கும். அதுமட்டுமல்லாமல், இந்த எஸ்யுவி ஆனது முன் மற்றும் பின்பக்க பம்ப்பர்கள், ரூஃப் ஸ்பாய்லர் மற்றும் ஸ்போர்ட்டியான தோற்றத்தை அளிக்கும் பெரிய 18-இன்ச் வீல்ஸை பெறுகிறது. மற்ற N லைன் மாடல்களைப் போலவே, இது இன்டீரியர் மற்றும் எக்ஸ்டீரியரில் ரெட் நிற அக்ஸ்ன்ட்ஸுடன் 'N லைன்' பேட்ஜிங் கொண்டிருக்கும். க்ரெட்டா N-லைன் வலுவான சஸ்பென்ஷன் அமைப்போடு டூயல்-டிப் எக்ஸாஸ்ட்ஸுடன் பெறலாம்.
க்ரெட்டா என் லைன்: இன்டீரியர் மற்றும் அம்சங்கள்
ஸ்பை படங்களைப் பார்த்தால், கேபினுக்குள் N லைன் கியர் லெவர் மற்றும் ஸ்டீயரிங் வீலுடன் முழுவதும் பிளாக் இன்டீரியர் தீம் உள்ளது. டாஷ்போர்டில் கருப்பு நிற லெதர் அப்ஹோல்ஸ்டரி, ஏர்கான் வென்ட்கள் மற்றும் டிஸ்ப்ளே ஸ்கிரீன்களைச் சுற்றியும் ரெட் அக்ஸ்ன்ட்ஸுடன் கானபடுகின்றன.
க்ரெட்டா N-லைன்: இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் விருப்பங்கள்
க்ரெட்டா N-லைன் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் வரும். இது 158bhp மற்றும் 253Nm பீக் டோர்க்கை உருவாக்க சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் டிசிடீ யூனிட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது.
க்ரெட்டா N-லைனின் லான்ச் தேதி மற்றும் விலைகள்
க்ரெட்டா N-லைன் N8 மற்றும் N10 வேரியன்ட்ஸில் அடுத்த மாதம் அதாவது மார்ச் மாதம் ரூ. 21 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என மதிப்பிடப்பட்ட ஆரம்ப விலையில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்