- க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் அடுத்த ஆண்டு லான்ச் செய்யப்படும்
- இன்டீரியர் மற்றும் எக்ஸ்டீரியரில் சில மாற்றங்களை கொண்டு வரலாம்
ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் எப்போ லான்ச் ஆகும்?
ஹூண்டாய் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் நாட்டில் 2024 க்ரெட்டாவின் விலையை அறிவிக்கலாம். கார் தயாரிப்பு நிறுவனம் இந்த மாடலை இன்டர்நேஷனல் சாலைகளில் டெஸ்ட் செய்து வருகிறது. அப்டேடட் மிட் சைஸ் எஸ்யுவியின் டீஸர் விரைவில் வெளியாகலாம், அதன் பிறகு முன்பதிவு தொடங்கும்.
2024 ஹூண்டாய் க்ரெட்டாவின் ஸ்பை ஃபோட்டோஸில் காணப்பட்ட ஃபீச்சர்ஸ்
க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் புதிய செல்டோஸ் மற்றும் எலிவேட்டின் அப்டேடட் வெர்ஷனாக இருக்கும் என்று புதிய ஸ்பை படங்களில் வெளிப்படுத்தியுள்ளன. இது L-வடிவ எல்இடி டிஆர்எல்ஸ், எல்இடி ஹெட்லேம்ப்ஸுடன் ஸ்ப்ளிட் ஹெட்லைட் க்ளஸ்டர், புதிய ரூஃப் ரெயில்ஸ் மற்றும் அலோய் வீல்ஸ் மற்றும் புதிய எல்இடி டெயில் லைட்ஸ் ஆகியவற்றைப் பெறும். இது புதிய பம்பர்ஸ், பிளாக்-அவுட் பி-பில்லர்ஸ், H-வடிவ டெயில்லைட்ஸ், நம்பர் பிளேட் இடைவெளியில் அப்டேடட் டெயில்கேட், ஃபாக் லைட்ஸ் மற்றும் ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட்ஸ் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.
க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் விவரங்கள்
வரவிருக்கும் ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் அதே 1.5 லிட்டர் என்ஏ பெட்ரோல் இன்ஜின் மற்றும் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் மூலம் இயக்கப்படலாம். இதனுடன், ஒரு புதிய 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் செவன்-ஸ்பீட் டிசிடீ யூனிடுடன் இனைக்கப்படலாம்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்