- லெவல் 2 ஏடாஸ் அம்சங்களுடன் கிடைக்கின்றன
- இந்தியாவில் இதன் ஆரம்ப விலை 11 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது
சமீபத்தில், ஹூண்டாய் தனது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட க்ரெட்டா எஸ்யுவியை ரூ.11 லட்சம் ஆரம்ப (எக்ஸ்-ஷோரூம்) விலையில் லான்ச் செய்தது. தற்போது கியா செல்டோஸுக்கு போட்டியாக இருக்கும் இந்த காரின் டெலிவரியும் தொடங்கியுள்ளது. ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் இந்த எஸ்யுவியை ஆன்லைனில் பிராண்டின் போர்ட்டல் அல்லது அருகிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட ஷோரூமில் டோக்கன் தொகையாக ரூ. 25,000க்கு பதிவு செய்யலாம்.
2024 க்ரெட்டா ஏழு வண்ண விருப்பங்களுடன் ஏழு வேரியன்ட்ஸில் வழங்கப்படுகிறது. அதன் இன்டீரியர் மற்றும் அம்சங்களைப் பற்றி பேசுகையில், இந்த SUV 10.25-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், வயர்லெஸ் மொபைல் இணைப்புடன் கூடிய 10.25-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், 360-டிகிரி கேமரா, டூயல் ஜோன் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், வென்டிலேடெட் ஃப்ரண்ட் சீட்ஸ், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் லெவல் 2 ஏடாஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
புதிய க்ரெட்டா மூன்று இன்ஜின் விருப்பங்களில் கிடைக்கிறது. இதில் 1.5 லிட்டர் என்ஏ பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் அடங்கும். டிரான்ஸ்மிஷன் விருப்பங்களைப் பற்றி பேசுகையில், இது சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல், சிக்ஸ்-ஸ்பீட் ஆட்டோமேட்டிக், செவன்-ஸ்பீட் டிசிடீ மற்றும் ஒரு சிவிடீ யூனிட்டைக் கொண்டுள்ளது, இது லிட்டருக்கு 21.8 கிமீ வரை செல்லும் ஏஆர்ஏஐ- சான்றளிக்கப்பட்ட மைலேஜை வழங்குகிறது.
கியா செல்டோஸ், ஹோண்டா எலிவேட், மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர், ஃபோக்ஸ்வேகன் டைகுன் மற்றும் ஸ்கோடா குஷாக் ஆகியவற்றுடன் ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் போட்டியிடும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்