- பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜினில் கிடைக்கும்
- 7 வேரியன்ட்ஸ் மற்றும் 7 வண்ண விருபங்களில் தேர்வு செய்யலாம்
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்டை அதிகாரப்பூர்வமாக நாட்டில் ரூ. 10.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் லான்ச் செய்தது. இது E, EX, S, S(O), SX, SX டெக் மற்றும் SX(O) ஆகிய ஏழு வேரியன்ட்ஸில் கிடைக்கிறது, இந்த கியா செல்டோஸ் போட்டியாளர் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் விருப்பங்களில் வழங்கப்படும்.
புதுப்பிப்புகளைப் பொறுத்தவரை, 2024 ஹூண்டாய் க்ரெட்டாவின் எக்ஸ்டீரியர் மற்றும் இன்டீரியர்ரை முழுமையாக மாற்றியமைத்துள்ளது. முன்னால், இது ஒரு பெரிய மூன்று வரிசை கிரில் மூலம் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட ஃப்ரன்ட் ஃபேஷியாவை பெறுகிறது, மாற்றியமைக்கப்பட்ட ஃப்ரண்ட் மற்றும் ரியர் பம்ப்பர்கள், H-வடிவ எல்இடி டிஆர்எல்கள், செங்குத்தாக அடுக்கப்பட்ட ஃபோக் லைட்ஸ் மற்றும் ஒரு புதிய எல்இடி ஹெட்லேம்ப்ஸை பெறுகிறது. பின்புறத்தில், இணைக்கப்பட்ட எல்இடி டெயில்லேப்ம் செட்-அப் மற்றும் ஃபாக்ஸ் ஸ்கிட் ப்ளேட் ஆகியவை மிக முக்கியமான மாற்றமாகும்
புதுப்பிக்கப்பட்ட க்ரெட்டாவின் இன்டீரியரில், டூயல் 10.25-இன்ச் ஸ்கிரீன் உடன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் மற்றும் வயர்லெஸ் மொபைல் இணைப்பை ஆதரிக்கும் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன்னை பெறுகிறது. கூடவே, இதில் வென்டிலேடெட் ஃப்ரண்ட் சீட்ஸ், பவர்ட் டிரைவர் சீட், டூயல் ஜோன் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், சரவுண்ட் வியூ மானிட்டர் மற்றும் லெவல் 2 ஏடாஸ் பாதுகாப்பு தொகுப்பு ஆகியவற்றைப் பெறுகிறது.
இன்ஜினைப் பொறுத்தவரை, ஃபேஸ்லிஃப்ட் க்ரெட்டாவை மூன்று இன்ஜின் விருப்பங்களில் பெறலாம். இதில் 1.5 லிட்டர் என்ஏ பெட்ரோல் 113bhp மற்றும் 144Nm டோர்க்கை உற்பத்தி செய்ய டியூன் செய்யப்பட்டுள்ளது, 1.5 லிட்டர் டீசல் இன்ஜினில் 114bhp மற்றும் 250Nm டோர்க், மற்றும் 158bhp மற்றும் 253Nm டோர்க்கை உருவாக்கும் 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் உள்ளது. டிரான்ஸ்மிஷன் விருபங்களில் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல், சிக்ஸ்-ஸ்பீட் ஆட்டோமேட்டிக், செவன்-ஸ்பீட் டிசிடீ மற்றும் சிவிடீ யூனிட் மூலம் கையாளப்படும்.
புதிய 2024 க்ரெட்டாவின் பெட்ரோல் வேரியன்ட் வாரியான எக்ஸ்-ஷோரூம் விலைகள் பின்வருபவை:
வேரியன்ட்ஸ் | எக்ஸ்-ஷோரூம் விலை |
E | ரூ. 10,99,900 லட்சம் |
EX | ரூ. 12,17,700 லட்சம் |
S | ரூ. 13,39,200 லட்சம் |
S(O) | ரூ. 14,32,400 லட்சம் |
SX | ரூ. 15,26,900 லட்சம் |
SX டெக் | ரூ. 15,94,900 லட்சம் |
SX(O) | ரூ. 17,23,800 லட்சம் |