- புதிய எக்ஸ்டீரியர் மற்றும் அம்சங்களில் இருக்கும்
- இதில் 158bhp பவரை வெளியிடும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படும்
ஜனவரி 16, 2024 அன்று இந்தியாவில் புதிய ஹூண்டாய் க்ரெட்டா அறிமுகமாக உள்ளது. அதன் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் புதிய மாற்றங்கள் செய்யப்படும், மேலும் இது பிராண்டின் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படும்.
இந்த அப்டேட்ட எடிஷனில் ஸ்பிளிட் ஹெட்லேம்ப் செட்டப் இருக்கும், இது ஒரு புதிய, மெல்லிய மற்றும் செங்குத்து ஹவுசிங் வழங்கப்படும். இது தவிர, ரியரில் பெரிய டெயில் லேம்ப்ஸ் மற்றும் வெர்னாவைப் போலவே இதுளையும் இல்லுமினேட்டட் லைட் ஸ்ட்ரிப் உள்ளது. புதிய க்ரெட்டாவில் அல்கஸார் போன்ற பெரிய 18 இன்ச் வீல்ஸ் இருக்கும் என்று நம்புகிறோம்.
புதிய அம்சங்கள் இந்த க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட்டில் கிடைக்கும்
க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட்டின் இன்டீரியரில் புதிய அப்ஹோல்ஸ்டரி, ஃபுல்ளி டிஜிட்டல் மற்றும் கலர்ட் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் மற்றும் ஏடாஸ் டெக்னாலஜி ஆகியவற்றைப் பெறலாம். இது தவிர, பனோரமிக் சன்ரூஃப், 10.25-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஃப்ரண்ட் வென்டிலேடெட் சீட்ஸ் மற்றும் தற்போதைய மாடலைப் போன்ற ஃபோர்-ஸ்போக் ஸ்டீயரிங் டிசைன் கிடைக்கும்.
க்ரெட்டா ஃபேஸ்லிஃப்டில் டர்போ பெட்ரோல் இன்ஜின் இருக்கும்
இந்த ஃபேஸ்லிஃப்ட் மாடலில் புதிய 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் இருக்கும், இது 158bhp பவரை உருவாக்கும். இந்த இன்ஜின் ஏற்கனவே ஹூண்டாய் வெர்னா மற்றும் ஹூண்டாய் அல்கஸார் கார்களில் உள்ளது.
புதிய க்ரெட்டா 2024 இல் அறிமுகப்படுத்தப்படும் போது இது கியா செல்டோஸ், மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா, எம்ஜி ஆஸ்டர், ஸ்கோடா குஷாக், ஹோண்டா எலிவேட் மற்றும் டொயோட்டா ஹைரைடர் ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்