- ரூ. 10.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் லான்ச் செய்யப்பட்டது
- 3 இன்ஜின் விருபங்களிலிருந்து தேர்வு செய்யலாம்
ஹூண்டாய் இறுதியாக நாட்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட க்ரெட்டா ஃபேஸ்லிஃப்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மிட்-சைஸ் எஸ்யுவி ஏழு வேரியன்ட்ஸிலும் மூன்று இன்ஜின் விருப்பங்களிலும் இருக்கும். புதிய க்ரெட்டாவின் வேரியன்ட்ஸ், வண்ண விருப்பங்கள் மற்றும் வெயிட்டிங் பீரியட் உள்ளிட்ட பெரும்பாலான விவரங்களை நாங்கள் இதில் உள்ளடக்கியுள்ளோம். இப்போது, இந்தக் கட்டுரையில், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட க்ரெட்டா ஃபேஸ்லிஃப்டின் இன்ஜின் வாரியான ஏஆர்ஏஐ- சான்றளிக்கப்பட்ட மைலேஜை இதில் பட்டியலிடுகிறோம்.
ஹூண்டாய் க்ரெட்டா 1.5-லிட்டர் என்ஏ பெட்ரோல், 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் என மூன்று இன்ஜின் விருப்பங்களுடன் கிடைக்கிறது. டிரான்ஸ்மிஷன் பொறுத்தவரை இதில் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல், சிக்ஸ்-ஸ்பீட் ஐஎம்டீ, ஆட்டோமேட்டிக் டோர்க் கன்வர்டர், சிவிடீ மற்றும் செவன்-ஸ்பீட் டிசிடீ கியர்பாக்ஸ் மூலம் இயக்கப்படும்.
புதிய 2024 ஹூண்டாய் க்ரெட்டாவின் ஏஆர்ஏஐ சான்றளிக்கபட்ட மைலேஜ் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன
இன்ஜின் | டிரான்ஸ்மிஷன் | ஃபியூல் எஃபிஷியன்சி |
1.5 லிட்டர் என்ஏ பெட்ரோல் | 6MT | லிட்டருக்கு 17.4 கிமீ |
6iMT | லிட்டருக்கு 17.7 கிமீ | |
1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் | 7DCT | லிட்டருக்கு 18.4 கிமீ |
1.5 லிட்டர் டீசல் எஞ்சின் | 6MT | லிட்டருக்கு 21.8 கிமீ |
6AT | லிட்டருக்கு 19.1 கிமீ |
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்