- இது டாடா கர்வ் உடன் போட்டியிடும்
- பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ 2025 இல் காட்சிப்படுத்தப்படும்
கோனா எலக்ட்ரிக்கின் கலவையான பதிலைத் தொடர்ந்து ஹூண்டாய் இந்தியா புதிய மிட்-சைஸ் எலக்ட்ரிக் எஸ்யுவியை உருவாக்கத் தொடங்கியுள்ளது. இந்த நேரத்தில் நிறுவனம் அதன் சிறந்த விற்பனையான எஸ்யுவியான க்ரெட்டாவின் இவி வெர்ஷனைப் கொண்டுவரப் போகிறது. க்ரெட்டா இவியின் வெளியீடு ஜனவரி 2025 இல் திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் இந்த ஆண்டின் பிற்பகுதியில் காட்சிப் படுத்தப்படும்.
ஹூண்டாய் க்ரெட்டா இவி முற்றிலும் புதிய பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படாமல், க்ரெட்டாவின் தற்போதைய K2 இயங்குதளத்தின் மாற்றியமைக்கப்பட்ட வெர்ஷனில் உருவாக்கப்படும். இது நிறுவனத்திற்கு செலவுகளைக் குறைக்கவும், பல பாகங்களை ஐசிஇ க்ரெட்டாவுடன் பகிர்ந்து கொள்ளவும் உதவும்.
இன்ஜின் மற்றும் பேட்டரி பேக் பற்றிய விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், க்ரெட்டா இவி இரண்டு பேட்டரி விருப்பங்களுடன் வழங்கப்படலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது, அதன் சுமார் 500 கிமீ கொண்ட டிரைவிங் ரேஞ்சை தரும். ஒப்பிடுகையில், டாடா கர்வ் இவியின் 45kWh மற்றும் 55kWh பேட்டரி வெர்ஷன் முறையே 502 கிமீ மற்றும் 585 கிமீ ரேஞ்சை வழங்குகின்றன.
க்ரெட்டா இவி ஆனது டாடா கர்வ் இவி, மஹிந்திரா XUV400 மற்றும் பிஒய்டி அட்டோ 3 ஆகியவற்றுடன் போட்டியிடும். இது தவிர, சுஸுகியின் முதல் எலக்ட்ரிக் கார் evX, பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ 2025 இல் காட்சிப்படுத்தப்படும், இது க்ரெட்டா இவிக்கு கடுமையான போட்டியைக் கொடுக்கும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்