- 500 கிமீ தூரம் வரை டிரைவிங் ரேஞ்ச் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
- ஏடாஸ், 360 டிகிரி சரவுண்ட் கேமரா போன்ற பல அம்சங்களையும் கொண்டிருக்கும்
ஹூண்டாய் இந்தியா தனது ப்ரீமியம் கார் க்ரெட்டாவின் இவி வெர்ஷனை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்த எலக்ட்ரிக் கார் ஜனவரி 2025க்குள் அறிமுகப்படுத்தப்படலாம். இந்த ஆண்டு இறுதிக்குள் க்ரெட்டா இவியின் உற்பத்தி தொடங்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
வடிவமைப்பைப் பற்றி பேசுகையில், இது க்ரெட்டாவின் ஐசிஇ மாடலை போலவே இருக்கும். க்ரெட்டா இவி ஆனது சார்ஜிங் போர்ட், கனெக்ட்டிங் எல்இடி டிஆர்எல்கள், ஸ்பிளிட் எல்இடி ஹெட்லேம்ப்ஸ், கனெக்டெட் எல்இடி டெயில்லேம்ப்ஸ், அத்துடன் ரியர் ஸ்பாய்லர், ரூஃப் ரெயில்ஸ் மற்றும் இன்டெக்ரேட்டட் ஸ்டாப் லைட்ஸுடன் கூடிய கவர்ச்சிகரமான ஃப்ரண்ட் மற்றும் ரியர் பம்பர்களுடன் ஒரு பிளாக்ட்-ஆஃப் கிரில்லைப் பெறும். இது தவிர, இந்த மாடலில் ஏரோ பேட்டர்ன் அலோய் வீல்கள் கிடைக்கும்.
அம்சங்களின் அடிப்படையில் கூட, இந்த எலக்ட்ரிக் கார் ஸ்டாண்டர்ட் க்ரெட்டா காரை விட குறைவாக இருக்காது. இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் பேனலுக்கான ட்வின்-டிஸ்ப்ளே வழங்கப்படும். இது தவிர, இந்த இவி காரில் வயர்லெஸ் சார்ஜர், லெவல் 2 ஏடாஸ், 360 டிகிரி சரவுண்ட் கேமரா, டூயல்-ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், வென்டிலேடெட் ஃப்ரண்ட் சீட்ஸ் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் போன்ற அம்சங்களும் இருக்கும்.
இருப்பினும், ஹூண்டாய் இந்தியாவிடமிருந்து இன்னும் பேட்டரி பேக் மற்றும் விவரக்குறிப்புகள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வரவில்லை. ஆனால், இது ஒருமுறை ஃபுல் சார்ஜ் செய்தால் 500 கிமீ தூரம் வரை பயணிக்கும் சக்தி வாய்ந்த பேட்டரி பேக் கிடைக்கும் என்று நம்புகிறோம்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்