- இது ஆண்டின் இறுதியில் லான்ச் செய்யப்படலாம்
- டாடா ஹேரியர் இவி, ஹோண்டா எலிவேட் இவி மற்றும் மாருதி eVX ஆகியவற்றுடன் போட்டியிடும்
ஹூண்டாய் நிறுவனத்தின் பிரபலமான எஸ்யுவி க்ரெட்டாவின் எலக்ட்ரிக் வெர்ஷன், க்ரெட்டா இவி விரைவில் இந்திய சந்தையில் வரவுள்ளது. இது இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்படும் மற்றும் இது ஐசிஇ ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனின் அடிப்படையாகக் கொண்டது.
சமீபத்தில், க்ரெட்டா இவி ஒரு பொது சாலையில் சோதனை செய்யப்பட்டது. புதிய ஸ்பை காட்சிகள் முன்பை விட குறைவாக மூடப்பட்டிருந்ததால் அதன் இரண்டு புதிய யூனிட்ஸ்ஸை அது வெளிப்படுத்தியது. அதன் டெயில்லைட்ஸின் டிசைன் தற்போதைய ஐசிஇ க்ரெட்டாவைப் போலவே உள்ளது, ஆனால் இது சீக்வென்ஷியல் டர்ன் இண்டிகேட்டர்ஸைக் கொண்டிருக்கும். இது தவிர அலோய் வீல்ஸின் டிசைனிலும் மாற்றங்கள் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2024 ஹூண்டாய் க்ரெட்டா இவி’யில், ஏடாஸ், 360-டிகிரி கேமரா, வென்டிலேடெட் ஃப்ரண்ட் சீட்ஸ், டாஷ்போர்டில் டூயல்-ஸ்கிரீன் செட்அப், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் புதிய டூ-ஸ்போக் ஸ்டீயரிங் வீல் போன்ற அம்சங்களைப் பெறுவோம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
க்ரெட்டா இவி’யின் இன்ஜின் விவரக்குறிப்புகள் பற்றி அதிக தகவல்கள் இல்லை, ஆனால் இது 50-60kWh பேட்டரி பேக்கைக் கொண்டிருக்கும் என்று நம்பப்படுகிறது, இது ஒரு முறை ஃபுல் சார்ஜ் செய்தால் 500 கிமீ வரை செல்லும்.
இந்த புதிய எலக்ட்ரிக் வெர்ஷனின் வருகையுடன், மிட்-சைஸ் எஸ்யுவி செக்மென்ட்டில் போட்டி இன்னும் சுவாரஸ்யமாக மாறும். ஹூண்டாய் நிறுவனத்தின் இந்த நடவடிக்கை அதிகரித்து வரும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவையை பூர்த்தி செய்ய உதவும் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு மற்றொரு சிறந்த தேர்வை இது வழங்கும்.
புகைப்பட ஆதாரம்: ரஷ்லேன்
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்