- க்ரெட்டா இவி உற்பத்தி இந்த ஆண்டின் இறுதியில் தொடங்கும்
- 2030க்குள் வரும் ஐந்து புதிய இவிகளில் இது ஒன்றாக இருக்கும்
ஹூண்டாய் க்ரெட்டா இவி இந்தியாவில் தொடர்ந்து சோதனை செய்யப்பட்டு வருகிறது, புதிய நாள் தொடங்கும் போது, ஹூண்டாய் க்ரெட்டா இவியின் மற்றொரு புதிய ஸ்பை ஷாட் எங்களிடம் வந்தது. மகாராஷ்டிராவின் புனேவில் உள்ள சார்ஜிங் ஸ்டேஷனில் ஸ்பை செய்யப்பட்டது, லான்ச் நேரத்தில் வெளியிடப்படும் முக்கிய அம்சங்களை அது உறுதிப்படுத்தியது.
புதிய க்ரெட்டா இவி முழுமையாக மூடப்பட்டிருந்த நிலையில், அதன் கண்ணாடிகளில் பிளைண்ட்-ஸ்பாட் மானிட்டர்கள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது, இது 360 டிகிரி கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும். முந்தைய ஸ்பை படங்களில் ஏடாஸ் அம்சங்களை வெளிப்படுத்தியிருந்தன, இது ஐசிஇ வெர்ஷனை போன்று லெவல் 2 அமைப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிசைன் மாற்றங்கள் பற்றிய விவரங்கள் குறைவாக இருந்தாலும், ஏரோ இன்செர்ட்களுடன் கூடிய புதிய வீல்ஸை நாம் பார்க்கலாம். ஃப்யூல் ஃபில்லர் கேபிள் இவி சார்ஜிங் போர்ட்டையும் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், கார் வண்ணமயமான சிறப்பம்சங்கள் வடிவில் இவி-குறிப்பிட்ட இன்சர்ட்ஸ்ஸை பெறும் என்று எதிர்பார்க்கிறோம்.
2024 க்ரெட்டா எலக்ட்ரிக் 50-60kWh பேட்டரி பேக்குகளைக் கொண்டிருக்கலாம், இது ஒரு எலக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது, இது முழு சார்ஜில் 500 கிமீ வரை செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, இது மாருதி eVX மற்றும் ஹோண்டா எலிவேட் இவி உடன் போட்டியிடும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்