- இன்னும் சில மாதங்களில் இது லான்ச் ஆகும் என தெரிகிறது
- க்ரெட்டா இவி மாடல் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்டை அடிப்படையாகக் கொண்டது
புதிய ஹூண்டாய் க்ரெட்டா தற்போது ஸ்டாண்டர்ட் மற்றும் N-லைன் வெர்ஷன் என இரண்டு வேரியன்ட்ஸில் கிடைக்கிறது. இப்போது, க்ரெட்டாவின் எலக்ட்ரிக் வெர்ஷன் இந்திய சந்தைக்குக் கொண்டு வர வாகனத் தயாரிப்பு நிறுவனம் தயாராகி வருகிறது. எலக்ட்ரிக் க்ரெட்டா சமீபத்தில் கொரியாவில் உள்ள சார்ஜிங் ஸ்டேஷனில் சார்ஜ் செய்வதைக் நாங்கள் கண்டோம்.
இங்குள்ள புகைப்படத்தில் காணப்படுவது போல், ஸ்டாண்டர்ட் வெர்ஷனோடு ஒப்பிடும்போது க்ரெட்டா இவி சிறிய மாற்றங்களைப் பெற்றுள்ளது. புதிய ஏரோ-டிசைன் அலோய் வீல்ஸ் மற்றும் ஃப்ரண்ட் பம்பரில் பொருத்தப்பட்ட சார்ஜிங் போர்ட் ஆகியவை மிகப்பெரிய வித்தியாசமாகும். அதுமட்டுமின்றி, எலக்ட்ரிக் க்ரெட்டாவானது பிலங்கேத் கிரில்லில் சிறிய எழுத்துக்களுடன் 'EV' பேட்ஜிங், கனெக்டெட் எல்இடி டிஆர்எல்கள் மற்றும் டெயில்லைட்ஸ், திருத்தப்பட்ட ஃப்ரண்ட் மற்றும் ரியர் பம்ப்பர்கள் மற்றும் தரையில் பொருத்தப்பட்ட பேட்டரி பேக்கின் கீழ் கிரவுண்ட் கிளியரன்ஸ் ஆகியவற்றைப் பெறும்.
இப்போது, வாகன உற்பத்தியாளர் க்ரெட்டா இவி’யின் டைமமென்ஷன் மற்றும் ஸ்டோரேஜ் பற்றிய எந்த தகவலையும் வெளியிடவில்லை. க்ரெட்டா இவி ஆனது 'ஃபிராங்க்' எனப்படும் ஃப்ரண்ட் ஸ்டோரேஜ் இடத்துடன் வரும் என்று நாங்கள் நினைக்கிறோம்.
அம்சங்களைப் பொறுத்தவரை, க்ரெட்டா இவி ஆனது, அதன் ஐசிஇ வெர்ஷனைப் போலவே அம்சம் நிறைந்த மாடலாகத் தொடரும். ட்வின்-டிஸ் பிளே அமைப்பு, திருத்தப்பட்ட சென்டர் கன்சோல், வயர்லெஸ் ஸ்மார்ட்ஃபோன் கனெக்ட், புதிய சீட் அப்ஹோல்ஸ்டரி, 360 டிகிரி கேமரா, ஃப்ரண்ட் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்கள், பனோரமிக் சன் ரூஃப் மற்றும் லெவல்-2 ஏடாஸ் சூட் போன்ற அம்சங்களுடன் இது வரும்.
விவரக்குறிப்புகளைப் பொறுத்தவரை, க்ரெட்டா இவி ஆனது 55-60kWh பேட்டரி பேக்குடன் வரும் என்று எதிர்பார்க்கிறோம், இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 500 கிலோமீட்டர் வரை செல்லும். போட்டியைப் பொறுத்தவரை, ஹூண்டாய் க்ரெட்டா இவி டாடா ஹேரியர், எம்ஜி ZS இவி, ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக், மஹிந்திரா XUV400 மற்றும் டாடா கர்வ் இவி ஆகியவற்றுடன் போட்டியிடும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்