- க்ரெட்டா ஐசிஇ வெர்ஷனுடன் விற்பனையாகும்
- க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் அடிப்படையாகக் கொண்டது
இந்தியாவில் ஹூண்டாய்க்கு அடுத்த பெரிய விஷயம் என்னவென்றால் க்ரெட்டா எஸ்யுவியின் ஃபுல்லி எலக்ட்ரிக் வெர்ஷன்னை லான்ச் செய்வது தான். இந்த பிரபலமான மாடல் விரைவில் அதன் புதிய இவி’யின் இன்ஜின்னை வரும் ஆண்டில் பெறும். மேலும், இதன் உற்பத்தி இந்த ஆண்டு இறுதியில் டிசம்பரில் தொடங்கும்.
ஹூண்டாய் க்ரெட்டா இவி மேம்படுத்தப்பட்ட க்ரெட்டா ஃபேஸ்லிஃப்டை அடிப்படையாகக் கொண்டது. சமீபத்திய ஸ்பை படங்களில் பார்த்தது போல, மாடலில் ஒரு பிளாக்-ஆஃப் கிரில், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பம்பர், ஏரோ-டிசைன் அலோய் வீல்ஸ் மற்றும் ஃப்ரண்ட்-ஃபெண்டரில் மவுண்ட் செய்யப்பட்ட சார்ஜிங் போர்ட் போன்ற சில இவி பண்புகளைக் கொண்ட வடிவமைப்பைக் கொண்டிருக்கும்.
அம்சங்களைப் பொறுத்தவரை, க்ரெட்டா இவி ஆனது மல்டிமீடியா மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் பேனலுக்கான டூயல் ஸ்கிரீன் செட்அப் , டூயல் ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், புதிய ஸ்டீயரிங் வீல், ஸ்டீயரிங் நெடுவரிசையில் பொருத்தப்பட்ட டிரைவ் செலக்டர், திருத்தப்பட்ட சென்டர் கன்சோல் மற்றும் ஏசி வென்ட்ஸ், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் புதிய சீட் அப்ஹோல்ஸ்டரி ஐ பெறும்.
மேலும், லெவல் 2 ஏடாஸ், 360-டிகிரி சரவுண்ட் கேமரா, ப்ளைன்ட் ஸ்பாட் மானிட்டர், அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், ஆறு ஏர்பேக்குகள் மற்றும் ஃப்ரண்ட் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்கள் போன்ற அம்சங்களிலிருந்து எலக்ட்ரிக் எஸ்யுவி பயனடையும்.
பேட்டரி பேக் அளவு மற்றும் டிரைவிங் ரேஞ்சை பொறுத்தவரை, க்ரெட்டா இவி ஆனது 50kWh முதல் 60kWh வரையிலான பேட்டரி யூனிட்டுடன் ஒருமுறை சார்ஜ் செய்தால் 500கிமீக்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதன் வருகையின் போது, க்ரெட்டா இவி ஆனது எம்ஜி ZS EV, டாடா நெக்ஸான் இவி, மஹிந்திரா XUV400, டாடா கர்வ் இவி மற்றும் ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் ஆகிய செக்மென்ட்களுடன் போட்டியிடும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்