- க்ரெட்டா இவி அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும்
- இரண்டு கார்களிலும் ஒரே பேட்டரி விருப்பத்தைக் காணலாம்
இவியின் சந்தையில் விற்பனையின் வேகம் சற்று மெதுவாக இருந்தாலும், ஹூண்டாய் மற்றும் கியா தங்கள் புதிய எலக்ட்ரிக் மாடல்களை சோதிக்கத் தொடங்கியுள்ளன. சமீபத்தில், க்ரெட்டா இவி மற்றும் கேரன்ஸ் இவி ஆகியவை இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்டன. இந்த இரண்டு எலக்ட்ரிக் கார்களும் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட உள்ளதால், சந்தையில் ஒரு புதிய பரபரப்பை காணலாம்.
மாருதி eVX மற்றும் ஹோண்டா எலிவேட் இவிக்கு போட்டியாக வரும் க்ரெட்டா இவி, முற்றிலும் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ஐஸ் மாடலை அடிப்படையாகக் கொண்டது. எக்ஸ்டீரியரில் புதிய அலோய் வீல்கள், கிளியர் லென்ஸ் எல்இடி டெயில்லைட்கள் மற்றும் இவி-குறிப்பிட்ட வண்ண இன்சர்ட்ஸ் போன்ற மாற்றங்கள் கிடைக்கும். இன்டீரியரில் புதிய கியர் லெவர், புதிய அப்ஹோல்ஸ்டரி, கவர்ச்சிகரமான சென்டர் கன்சோல் மற்றும் த்ரீ-ஸ்போக் ஸ்டீயரிங் போன்ற அம்சங்கள் இருக்கலாம். இது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியிடப்படும் என்றும், 2025 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கேரன்ஸ் இவி ஆனது டூயல்-டோன் ஏரோ-ஆப்டிமைஸ்ட் அலோய் வீல்களுடன் புதிய வடிவமைப்பைப் பெறும். இந்த எலக்ட்ரிக் எம்பீவியின் எக்ஸ்டீரியரில் எல்இடி லைட் பார்கள், புதிதாக வடிவமைக்கப்பட்ட ஃப்ரண்ட் மற்றும் ரியர் பம்ப்பர்கள் மற்றும் புதிய எல்இடி டெயில்லைட்கள் போன்ற மாற்றங்கள் இருக்கும். அடுத்த ஆண்டு இரண்டாம் பாதியில் கியா தனது புதிய கேரன்ஸ் இவியை அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹூண்டாய் க்ரெட்டா இவி மற்றும் கியா கேரன்ஸ் இவி இரண்டும் 55-60kWh பேட்டரி பேக்கைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது ஒருமுறை ஃபுல் சார்ஜ் செய்தால் 500 கிமீ தூரம் வரை செல்லும் என்று கூறப்படுகிறது. இது இவி பிரிவில், குறிப்பாக நீண்ட தூர பயணங்களுக்கு ஒரு பெரிய அப்டேடாக இருக்கும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்