- ஆறு மாதங்களில் இந்த மைல்கல்லை எட்டியது
- இதன் விலை 11 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது
ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய எஸ்யுவி க்ரெட்டா மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது. இந்த எஸ்யுவி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து 1 லட்சம் யூனிட் விற்பனையை கடந்துள்ளது. இந்த க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் ஜனவரி 2024 இல் அறிமுகமானது மற்றும் இந்த எண்ணிக்கையை வெறும் ஆறு மாதங்களில் கடந்துவிட்டது. ஒவ்வொரு நாளும் சராசரியாக 550 க்ரெட்டாக்கள் விற்கப்பட்டதாக இந்த புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
க்ரெட்டா ஏழு வேரியன்ட்ஸில் கிடைக்கிறது, இதன் விலை ரூ. 11 லட்சம் முதல் ரூ. 20.15 லட்சம் வரை செல்லுகின்றன. க்ரெட்டாவின் பிரபலத்திற்கு ஒரு முக்கிய காரணம் அதன் சிறப்பம்சங்கள் நிறைந்த கேபின் ஆகும். டூயல் ஸ்கிரீன், டூயல்-ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், 360 டிகிரி கேமரா, வென்டிலேடெட் ஃப்ரண்ட் சீட்ஸ், வயர்லெஸ் சார்ஜர், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் லெவல் 2 ஏடாஸ் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது.
க்ரெட்டா 1.5 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் உள்ளிட்ட மூன்று இன்ஜின் விருப்பங்களுடன் வருகிறது.
இந்த சாதனை குறித்து ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் சிஓஓ தருண் கார்க் கூறுகையில், 'புதிய ஹூண்டாய் க்ரெட்டாவின் இந்த சாதனையால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் எஸ்யுவி 1 லட்சம் விற்பனை என்ற மைல்கல்லை எட்டி அதன் பிரபலத்தை காட்டுகிறது. இந்திய சந்தையில் ஹூண்டாய் க்ரெட்டா நிறுவனம் தொடர்ந்து புதிய ஸ்டாண்டர்ட்ஸ் அமைத்து வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்' என்று அவர் கூறினார்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்