- தற்போது இதன் விலை ரூ.11 லட்சமாக உள்ளது
- இதன் N-லைன் வெர்ஷன் அடுத்த வாரம் வெளியிடப்படும்
ஹூண்டாய் ஜனவரியில் புதுப்பிக்கப்பட்ட க்ரெட்டாவை அறிமுகப்படுத்தியது, இப்போது க்ரெட்டா இந்தியாவில் 75,000 யூனிட்களை முன்பதிவு செய்ததாக அறிவித்துள்ளது. பிப்ரவரி 2024 தொடக்கத்தில் 51,000 முன்பதிவுகளைத் தாண்டிய க்ரெட்டா ஒரு மாதத்திற்குள் கிட்டத்தட்ட 24,000 ஆர்டர்களைப் பதிவு செய்துள்ளது. கூடுதலாக, பிராண்ட் சமீபத்தில் இந்தியாவில் ஹூண்டாய் க்ரெட்டாவின் மொத்த விற்பனை 10 லட்சம் யூனிட்கள் என அறிவித்தது.
புதிய ஹூண்டாய் க்ரெட்டா ரூ. 11 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் வழங்கபடுகிறது. இது E, EX, S, S(O), SX, SX டெக் மற்றும் SX(O) ஆகிய ஏழு வேரியன்ட்ஸில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அபிஸ் பிளாக் பேர்ல், ரோபஸ்ட் எமரால்டு பேர்ல், ஃபியரி ரெட், ரேஞ்சர் காக்கி, டைட்டன் க்ரே, அட்லஸ் ஒயிட் மற்றும் அட்லஸ் ஒயிட் மற்றும் அபிஸ் பிளாக் ரூஃப் (டூயல்-டோன்) ஆகிய வண்ண விருப்பங்களில் க்ரெட்டாவை வாங்கலாம்.
இந்த எஸ்யுவியில் 1.5 லிட்டர் என்ஏ பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின்கள் உள்ளன. டிரான்ஸ்மிஷனில் பொறுத்தவரை, சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல், சிக்ஸ்-ஸ்பீட் ஐவிடீ/ஐஎம்டீ, சிக்ஸ்-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் மற்றும் செவன்-ஸ்பீட் டிசிடீ கியர்பாக்ஸ் விருப்பங்களுடன் வழங்கப்பட்டுள்ளன.
மற்ற செய்திகளில், கார் தயாரிப்பாளர் க்ரெட்டாவின் N லைன் வெர்ஷனை மார்ச் 11 அன்று அதாவது அடுத்த வாரம் லான்ச் செய்யப் போகிறார். இந்த எஸ்யுவியின் எக்ஸ்டீரியர், வேரியன்ட்ஸ், நிறம், இன்ஜின், பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் காத்திருப்பு காலம் பற்றி ஏற்கனவே எங்க வெப்சைட்டில் கூறியுள்ளோம்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்