- அறிமுகப்படுத்தப்பட்ட க்ரெட்டாவிலிருந்து சில அம்சங்கள் எடுக்கப்பட்டுள்ளது
- இன்ஜினில் எந்த மாற்றமும் இல்லை
ஹூண்டாய் இந்தியா சமீபத்தில் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட்டை நாட்டில் லான்ச் செய்தது, இப்போது அது வரும் வாரங்களில் அதன் N லைன் வெர்ஷன்னை லான்ச் செய்ய தயாராக உள்ளது. கார் தயாரிப்பாளர் க்ரெட்டா அடிப்படையிலான மூன்று வரிசை எஸ்யுவி அல்கஸாரின் ஃபேஸ்லிஃப்ட்டை சோதிக்கத் தொடங்கியுள்ளது.
இந்த மாடல் சமீபத்தில் அதன் எக்ஸ்டீரியர்ரை சில மறைப்புடன் சோதனை செய்தது. இருப்பினும், டெஸ்ட் மாடலில் புதிய டூயல்-டோன் அலோய் வீல்ஸ் இருந்தன. கூடுதலாக, டெஸ்ட் மாடலில் ஓஆர்விஎம்களுக்கு கீழே கேமராக்களைக் காணலாம், இது 360-டிகிரி கேமரா மற்றும் ப்ளைன்ட் வியூ மானிட்டரிங் செட்-அப் இருப்பதை சுட்டிக்காட்டுகிறது.
கூடுதலாக, அப்டேட்ட அல்கஸாரின் ரியரில் புதிய கிரில்லைப் பெறும், எல்இடி டிஆர்எல்களை இணைக்கும் மற்றும் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பம்பர். எக்ஸ்டர் மற்றும் சாண்டா ஃபே (குளோபல்) போன்ற ஹெட்லேம்ப்கள் மற்றும் டெயில்லைட்களில் 'எச்-வடிவ' டிசைனையும் எதிர்பார்க்கிறோம்.
தற்போதைய அல்கஸாரில் ஏற்கனவே டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், பெரிய இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், பனோரமிக் சன்ரூஃப், ஃப்ரண்ட் பார்க்கிங் சென்சார்கள், 360 டிகிரி கேமரா மற்றும் வயர்லெஸ் சார்ஜர் உள்ளிட்ட பல அம்சங்களுடன் வருகிறது. இருப்பினும், அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட் க்ரெட்டாவிடமிருந்து தூலா-ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், லெவல் 2 ஏடாஸ், சீகுவென்ஷியல் டர்ன் இன்டிகேட்டர் மற்றும் பவர்ட் வென்டிலேடெட் ஃப்ரண்ட் சீட்ஸ் உள்ளிட்ட பல அம்சங்களைப் பெறும்.
அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட் தற்போதைய மாடலைப் போலவே 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின்களுடன் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிரான்ஸ்மிஷன் விருப்பங்களில் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல், செவன்-ஸ்பீட் டிசிடீ மற்றும் ஆட்டோமேட்டிக் டோர்க் கன்வர்டர் யூனிட் ஆகியவை அடங்கும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்