- க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் ஜனவரி 16, 2024 அன்று அறிமுகமாகும்
- அடுத்த மாதம் எவ்வளவு உயர்வு என்பது தெரியவரும்
ஹூண்டாய் இந்தியா தனது அனைத்து மாடல்களின் விலைகளையும் 1 ஜனவரி 2024 முதல் உயர்த்தும் என்று அறிவித்துள்ளது. அதிகரிப்பின் சரியான அளவு இன்னும் தெரிய வரவில்லை. இந்த முடிவானது அதிகரித்து வரும் உள்ளீடு செலவுகள் மற்றும் உற்பத்தி உதிரிபாகங்களின் அதிகரிப்பு ஆகியவை காரணமாகும் என்று கூறினார்.
இது தவிர, ஹூண்டாய் நிறுவனம் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட்டை 16 ஜனவரி 2024 அன்று இந்தியாவில் அறிமுகம் செய்யத் தயாராகி வருகிறது. புதுப்பிக்கப்பட்ட மாடல், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட வெர்னா மற்றும் அல்காஸரில் இருந்து புதிய எக்ஸ்டீரியர் ஸ்டைல், புதிய அம்சங்கள் மற்றும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆகியவற்றைப் பெறும்.
பிராண்ட் சமீபத்தில் நடிகர் ஷாருக்கானுக்கு ஐயோனிக் 5 இன் 1,100வது யூனிட்டை பரிசாக வழங்கியது. மேலும், பிராண்டின் 3 மாடல்கள் 2024 ஆம் ஆண்டின் இந்திய கார் ஆஃப் தி இயர் (ஐகொட்டி) க்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன. எக்ஸ்டர் மற்றும் வெர்னா ஆகியவை ஐகொட்டி பட்டத்திற்கான வலுவான போட்டியாளர்களாக இருந்தாலும், ஐயோனிக் 5 ஆண்டின் பசுமை சுற்றுசூழல் கார் பிரிவின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
விலை உயர்வு குறித்து ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் சிஓஓ தருண் கர்க் கூறுகையில், “ஹூண்டாய் மோட்டார் இந்தியாவில், எப்பொழுதும் முடிந்தவரை செலவு அதிகரிப்புகளை உள்வாங்கி வாடிக்கையாளர்களின் தொடர்ச்சியான மகிழ்ச்சியை உறுதி செய்ய முயற்சி செய்கிறோம். இருப்பினும், அதிகரித்து வரும் உள்ளீட்டுச் செலவில் ஒரு பகுதியைச் சிறிய விலை உயர்வு மூலம் சந்தைக்கு அனுப்புவது இப்போது கட்டாயமாகிவிட்டது. இந்த விலை உயர்வு ஜனவரி 1, 2024 முதல் அமலுக்கு வரும்” என்று அவர் கூறினார்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்