- பேஸ் வேரியண்ட் அதிக விலை உயர்வை கண்டது
- பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி விருப்பங்களில் கிடைக்கும்
அக்டோபர் 2023 இல் ஹூண்டாய் ஆரா குறிப்பிடத்தக்க விலை உயர்வை பெற்றது. இந்த மாடல் தற்போது ரூ. 11,200 வரை விலை உயர்வானது மற்றும் இதை பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி இன்ஜின் தேர்வுகளில்- E, S, SX, SX (O), மற்றும் SX ப்ளஸ் ஆகிய வேரியண்ட்ஸில் பெறலாம். இந்த அப்டேட் உடன், ஹூண்டாய் ஆரா செடானின் ஆரம்ப விலை ரூ. 6.43 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும்.
பேஸ்-ஸ்பெக் E வேரியண்ட்டில் ரூ. 11,200 விலை உயர்த்த நிலையில், SX(O) தவிர்த்து மற்ற வேரியண்ஸின் ரூ. 9,000 - ரூ. 9,900 ரேஞ்சில் விலை அதிகரித்துள்ளது.
ஹூண்டாய் ஆரா காரின் வேரியண்ட் வாரியான புதிய எக்ஸ்-ஷோரூம் விலைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:
வேரியண்ட்ஸ் | புதிய எக்ஸ்-ஷோரூம் விலை | விலை உயர்வின் அளவு |
E | ரூ. 6,43,700 | ரூ. 11,200 |
S | ரூ. 7,27,800 | ரூ. 9,900 |
SX | ரூ. 8,04,300 | ரூ. 9,000 |
S (சிஎன்ஜி) | ரூ. 8,22,800 | ரூ. 9,900 |
SX (O) | ரூ. 8,60,800 | - |
SX ப்ளஸ் ஏஎம்டீ | ரூ. 8,84,500 | ரூ. 9,001 |
SX சிஎன்ஜி | ரூ. 8,99,800 | ரூ. 9,500 |
ஹூண்டாய் ஆரா 1.2 லிட்டர் என்ஏ பெட்ரோல் இன்ஜினுடன், நிறுவனம் பொருத்திய சிஎன்ஜி கிட் விருப்பத்துடன் வருகிறது. இந்த மோட்டார் ஸ்டாண்டர்ட் முறையில் 82bhp மற்றும் 114Nm டோர்க்கை உற்பத்தி செய்யும் வகையில் டியூன் செய்யப்பட்டுள்ளது. அதே சமயம், சிஎன்ஜி பயன்முறையில், இன்ஜின் 68bhp மற்றும் 95Nm டோர்க்கை உருவாக்குகிறது. இதற்கிடையில், டிரான்ஸ்மிஷன் விருப்பங்களில் ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஏஎம்டீ யூனிட் ஆகியவை அடங்கும்.
சமீபத்திய செய்திகளில், கொரிய வாகன உற்பத்தியாளர் ஆறு ஏர்பேக்ஸை அனைத்து மாடல்ஸிலும் அவற்றின் முழு ரேஞ்சில் தரநிலையாக்கியுள்ளது.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்