- இன்னும் சில மாதங்களில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
- லெவல் 2 ஏடாஸ் தொழில்நுட்பத்தைப் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது
ஹூண்டாய் இந்தியா அல்கஸாரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனைத் தொடர்ந்து டெஸ்ட் செய்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், இந்திய வாடிக்கையாளர்களுக்காக இந்த மாடலின் புதிய வெர்ஷனை ஹூண்டாய் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடலில் புதிய க்ரெட்டா எஸ்யுவி போன்ற பல அம்சங்கள், எலிமெண்ட்ஸ் மற்றும் டெக்னாலஜி இருக்கும். சமீபத்தில் இந்த த்ரீ-ரோ எஸ்யுவி சோதனையின் போது காணப்பட்டது, அதன் ஃப்ரண்ட் மற்றும் ரியர் ப்ரோஃபைல்ஸ் தொடர்பான பல தகவல்களை இதில் மதிப்பிடலாம்
இந்த மேம்படுத்தப்பட்ட அல்கஸாரின் ஃப்ரண்ட் மற்றும் ரியரில் பல மாற்றங்களைக் காணலாம். க்ரெட்டாவைப் போலவே, டிஆர்எல்களை டர்ன் இண்டிகேட்டர்களுடன் இணைக்கும் வசதி இந்த எஸ்யுவியிலும் கிடைக்கும். மேலும், ஸ்லாட் வடிவத்துடன் கூடிய எல்இடி ஹெட்லேம்ப்கள் கிரில்லுக்கு மேலே காணப்படும். இது தவிர, படங்களை நாம் கூர்ந்து கவனித்தால், பம்பருடன் நெருக்கமாக ஒருங்கிணைக்கப்பட்ட ஏடாஸ் சென்சார்கள் டெக்னாலஜியும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதன் சைட் ப்ரோஃபைல் ஏறக்குறைய முதல் வெர்ஷன் போலவே இருந்தாலும், இந்த மேம்படுத்தப்பட்ட அல்கஸார் புதிய அலோய் வீல்ஸைப் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில், ரியரில் மாற்றப்பட்ட பம்பருடன் கனெக்டிங் லைட் பார்ஸ் கொண்ட டெயில் லேம்ப்ஸும் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட் அதே இன்ஜின் விருப்பங்களுடன் தொடரும், புதுப்பிக்கப்பட்ட த்ரீ-ரோ அல்கஸார் கியா கேரன்ஸ், எம்ஜி ஹெக்டர் ப்ளஸ், டாடா சஃபாரி, மஹிந்திரா XUV700, டொயோட்டா இனோவா க்ரிஸ்டா மற்றும் மஹிந்திரா ஸ்கார்பியோ என் போன்றவற்றுடன் போட்டியிடும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்