- ஃப்ரண்ட் லூக் முற்றிலும் புதியதாக இருக்கும்
- இதில் புதிய அலோய் வீல்கள் கிடைக்கும்
ஹூண்டாய் இந்தியா அல்கஸார் எஸ்யுவியின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை வரும் மாதங்களில் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த த்ரீ-ரோ மாடல் க்ரெட்டாவை அடிப்படையாகக் கொண்டது மற்றும் புதிய டிசைன் மற்றும் அம்சங்களுடன் வரும், ஆனால் அதன் இன்ஜின் விருப்பங்கள் அப்படியே இருக்கும். சமீபத்தில் வெளிவந்த ஸ்பை ஷாட்ஸில் இதன் ஃப்ரண்ட் டிசைன் லீக் ஆனது, இது தொடர்பான பல தகவல்களை வெளிப்படுத்துகிறது.
அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட்டின் லூக் க்ரெட்டாவிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்பதை படத்தில் காணலாம். மாற்றங்களில் கனெக்டிங் லைட் பார் கொண்ட மறுவடிவமைப்பு செய்யப்பட்ட எல்இடி டிஆர்எல்கள், ஸ்குயர் ஸ்பிளிட் எல்இடி ஹெட்லேம்ப்ஸ், ஹோரிசொன்டள் ஸ்லேட்ஸுடன் கூடிய அகலமான கிரில் மற்றும் புதிய பம்பர் ஆகியவை அடங்கும்.
கூடுதலாக, அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட் ஸ்வீர்ல்-பேட்டர்ன் டூயல்-டோன் அலோய் வீல்களுடன் வரும், இது எஸ்யுவியின் லூக்கை மேலும் மேம்படுத்தும். ரியர் ப்ரோஃபைல் மாற்றப்படும், இதில் கனெக்டெட் எல்இடி டெயில்லைட்ஸும் இருக்கும்.
அம்சங்களைப் பற்றி பேசுகையில், அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட்டில் இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் பேனலுக்கான 10.25-இன்ச் ட்வின்-டிஸ்ப்ளே, 360-டிகிரி சரவுண்ட் கேமரா, வென்டிலேடெட் ஃப்ரண்ட் சீட்ஸ், டூயல்-ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் எலக்ட்ரிகள்ளி சரிசெய்யக்கூடிய டிரைவர் சீட் இருக்கும். கூடுதலாக, க்ரெட்டாவைப் போலவே, புதிய அல்கஸாரும் லெவல் 2 ஏடாஸ் ஐ கொண்டிருக்கும்.
ஹுண்டாய் அல்கஸாரின் இன்ஜின் விருபங்களில் எந்த மாற்றமும் இருக்காது. இந்த எஸ்யுவியில் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்கள் இருக்கும். டிரான்ஸ்மிஷன் விருப்பங்களில் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல், டோர்க் கன்வர்டர் ஆட்டோமேட்டிக் மற்றும் டிசிடீ கியர்பாக்ஸ் ஆகியவை அடங்கும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்