- தற்போதுள்ள இன்ஜின் விருப்பங்கள் அப்படியே இருக்கும்
- செப்டம்பர் 9, 2024 அன்று லான்சாகும்
ஹூண்டாய் நிறுவனத்தின் பிரபலமான எஸ்யுவி அல்கஸாரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் செப்டம்பர் 9, 2024 அன்று இந்திய மார்க்கெட்க்கு வருகிறது. அறிமுகத்திற்கு முன்பே, இந்த த்ரீ ரோ சக்திவாய்ந்த எஸ்யுவியின் புதிய தோற்றம், வேரியன்ட்ஸ், வண்ணங்கள் மற்றும் இன்ஜின் விருப்பங்களை நிறுவனம் வெளிப்படுத்தியுள்ளது. இந்த கட்டுரையில் புதிய அல்கஸாரின் இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் விருபங்கள் பற்றிய முழுமையான தகவல்களை உங்களுக்கு இதில் வழங்க உள்ளோம்.
புதிய அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட் இரண்டு சக்திவாய்ந்த இன்ஜின் விருப்பங்களைப் பெறும், இதில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் அடங்கும். சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் செவன்-ஸ்பீட் டிசிடீ கியர்பாக்ஸ் பெட்ரோல் இன்ஜினுடன் கிடைக்கும், இது சிறப்பான செயல்திறனை தரும். அதே நேரத்தில், டீசல் இன்ஜின் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் சிக்ஸ்-ஸ்பீட் டோர்க் கன்வர்டர் யூனிட்டுடன் வரும்.
இந்த இரண்டு இன்ஜின் விருப்பங்களையும் மனதில் வைத்து, அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட், எக்ஸிகியூட்டிவ், பிரஸ்டீஜ், பிளாட்டினம் மற்றும் சிக்னேச்சர் போன்ற பல வேரியன்ட்ஸில் வழங்கப்படும். பெட்ரோல் இன்ஜின் வேரியன்ட் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் எக்ஸிகியூட்டிவ் மற்றும் பிரஸ்டீஜ் வேரியன்ட்ஸில் கிடைக்கும், அதே நேரத்தில் செவன்-ஸ்பீட் டிசிடீ கியர்பாக்ஸ் பிரஸ்டீஜ், பிளாட்டினம் மற்றும் சிக்னேச்சர் வேரியன்ட்ஸில் கிடைக்கும். அதே நேரத்தில், டீசல் இன்ஜினுக்கு, சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் எக்ஸிகியூட்டிவ் மற்றும் பிரஸ்டீஜ் வேரியன்ட்ஸிலும், சிக்ஸ்-ஸ்பீட் டோர்க் கன்வர்ட்டர் கியர்பாக்ஸ் பிளாட்டினம் மற்றும் சிக்னேச்சர் வேரியன்ட்ஸிலும் கிடைக்கும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்