- ரூ. 25000 செலுத்தி முன்பதிவு செய்யலாம்
- பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜினில் கிடைக்கும்
ஃபேஸ்லிஃப்ட் ஹூண்டாய் அல்காஸருக்கான முன்பதிவுகளை தொடங்குவதாக ஹூண்டாய் அறிவித்துள்ளது. இந்த தென் கொரிய வாகன உற்பத்தியாளரின் த்ரீ-ரோ எஸ்யுவி ஆறு மற்றும் ஏழு சீட் விருப்பங்களுடன் ஆறு வண்ணங்கள் மற்றும் இரண்டு இன்ஜின் விருப்பங்களில் வழங்கப்படும். இந்த எஸ்யுவிக்கான முன்பதிவு ரூ. 25,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான விலைகள் செப்டம்பர் 9 ஆம் தேதி அறிவிக்கப்படும். எக்ஸிகியூட்டிவ், பிரெஸ்டீஜ், பிளாட்டினம் மற்றும் சிக்னேச்சர் ஆகிய 4 வேரியன்ட்ஸுடன் புதிய ரோபஸ்ட் எமரால்டு மேட் உட்பட ஒன்பது வண்ண விருப்பங்களில் இது வழங்கப்படும்.
எக்ஸ்டீரியரில், அல்கஸார் அதன் பால்கி லூக்கை தக்க வைத்துக் கொண்டுள்ளது, ஆனால் புதிய லோ-செட் ஹெட்லேம்ப்ஸ், 'H' வடிவ டிஆர்எல்ஸ் மற்றும் புதிய 18-இன்ச் அலோய் வீல்ஸ் ஃபேன் போன்ற வடிவத்தைப் பெறுகிறது. இதில் ஹூண்டாய் செய்த மிக முக்கியமான மாற்றம் என்னவென்றால், இந்த காரில் சிக்னேச்சர் கனெக்டெட் டெயில் லேம்ப்ஸுடன் வரும், அதன் ரியரில் புதிய ரியர் ஸ்பாய்லர், ஹை-மவுண்டெட் ஸ்டாப் லைட் மற்றும் பாஷ் ப்ளேட்ஸ்கான டிசைனனைப் பெறுவீர். ஹூண்டாய் அதன் கேபினை வெளியிடவில்லை, ஆனால் இது ஹூண்டாய் க்ரெட்டாவிலிருந்து அனைத்து புதுப்பிப்புகளையும் பெறும் என்று நாங்கள் யூகிக்கிறோம். ஆட்டோமேட்டிக் வெர்ஷனில் அல்கஸார் லெவல்-2 ஏடாஸ் ஐப் பெறும் என்பதை வாகன உற்பத்தியாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
அல்கஸார் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் செவன்-ஸ்பீட் டூயல் க்ளட்ச் டிரான்ஸ்மிஷன் (DCT) உடன் இணைக்கப்பட்ட 1.5 டர்போ ஜிடிஐ பெட்ரோல் இன்ஜினுடன் பெறலாம். மேலும் இந்த எஸ்யுவி 1.5 U2 சிஆர்டிஐ டீசல் இன்ஜினுடன் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் சிக்ஸ்-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் வரும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்