- அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட் முதலில் ரெட் பெயிண்ட் ஸ்கீமில் காணப்பட்டது
- செப்டம்பர் 2025 இல் தொடங்க வாய்ப்பு உள்ளது
ஹூண்டாய் இந்தியா அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை அறிமுகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த த்ரீ-ரோ எஸ்யுவி செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களுக்கு இடைப்பட்ட பண்டிகைக் காலத்தில் அறிமுகமாகலாம். மேலும், அதன் அறிமுகத்திற்கு முன்னதாக, மாடல் மீண்டும் ஒரு புதிய எக்ஸ்டீரியர் நிறத்தில் டெஸ்டிங்கில் உட்பட்டது. அதன் தோற்றத்தில், அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட் அதன் ப்ரொடக்ஷன் ரெடி அவதாரத்தில் தென்ப்பட்டது.
புகைப்படத்தில் காணப்படுவது போல், எஸ்யுவி சில்வர் அக்ஸ்ன்ட்ஸுடன் பிளாக் பெயிண்ட் ஸ்கீமில் தென்ப்பட்டது. முன்னதாக, மற்றொரு டெஸ்ட் மாடலில் ரெட் எக்ஸ்டீரியர் நிறத்தில் டெஸ்ட் செய்யப்பட்டது. இதேபோன்ற டிசைன் சிறப்பம்சங்களில் சில ஸ்வீர்ல்-வடிவ டூயல்-டோன் அலோய் வீல்ஸ், ரீடிசைன் செய்யப்பட்ட ஃப்ரண்ட் மற்றும் ரியர் பம்ப்பர்ஸ், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட ஹெட்லைட்ஸ் மற்றும் டிஆர்எல்’ஸ், கனெக்டெட் டெயில்லைட்ஸ், ஷார்க்—ஃபின் ஆண்டெனா, ரூஃப்-ரெயில்ஸ் மற்றும் டூயல் எக்ஸாஸ்ட் டிப் ஆகியவை அடங்கும்.
அம்சம் வாரியாக, அல்கஸார் அதன் பிரிவில் மிகவும் அம்சம் நிறைந்த மாடல்களில் ஒன்றாகும். மேலும், அதன் பெரும்பாலான அம்சங்கள் பேஸ் வேரியன்ட்டிலிருந்தே கொண்டு செல்லப்பட்டாலும், அல்கஸார் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு ஒரு புதுப்பிப்பையும் பெறவில்லை. போட்டியிடும் கார்கள் ஏடாஸ் சூட் போன்ற சில சிறந்த அம்சங்களை வழங்குகின்றன. இருப்பினும், ஃபேஸ்லிஃப்ட்டுடன், க்ரெட்டா-அடிப்படையிலான த்ரீ-ரோ எஸ்யுவி லெவல் 2 ஏடாஸ் டெக்னாலஜியை பெற தயாராக உள்ளது, இதன் மூலம் அதன் போட்டியாளர்களிடம் கடுமையான போட்டியைக் கொடுக்கும்.
இயந்திர ரீதியாக, எஸ்யுவி தற்போதைய மறு செய்கையின் அதே இன்ஜின் விருப்பத்துடன் தொடர்கிறது. இன்ஜின்களில் 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆகியவை அடங்கும், இவை மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் விருப்பங்களுடன் வழங்கப்படும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்