- தினசரி 250 முதல் 300 கார்ஸ் எம்ஜியின் ஹலோல் தொழிர்சாலையில் தயாரிக்கபடுகிறது
- வண்ணங்களைப் பற்றிய நல்ல புரிதல் இருக்கும் காரணத்தால், வண்ணம் பூசும் வேலை பிரிவில் பெண்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்
மோரிஸ் அண்ட் கராஜேஸ் குஜராத் மாநிலதின் ஹலோல் தொழிர்சாலையில் ஒரு நாளைக்கு கிட்டதட்ட 250 முதல் 300 கார்ஸ் தயாரிக்கப்படுகிறது. இதில் எம்ஜியின் ஃபிளஷ்ஸிப் மாடலும் இங்கு தான் செய்யப்படுகிறது. இந்த ப்ரொடக்ஷன் லைன்-ஆப்பில் சுமார் 950 முதல் 1000 பெண்கள் வேலை செய்கின்றார்கள்.
ஜஎம்ஜி மோட்டார் இந்தியாவின் சீனியர் டைரெக்டர், ஹியூமன் ரிசோர்சஸ், யஷ்விந்தர் பாட்டியல் கருத்துப்படி, “பெண்கள் ஒவ்வொரு வேலையையும் மிகத் துல்லியமாகச் வேலை செய்கிறார்கள். அவர்களின் வேலை சிறந்தது என்று நான் தனிப்பட்ட முறையில் நம்புகிறேன். அவர்களின் வண்ண உணர்வு சிறப்பாக உள்ளது, அதனால்தான் பெரும்பாலும் பெண்கள் பெயிண்ட் வேலை செய்வதை நீங்கள் பார்ப்பீர்கள்”.
எம்ஜியின் இந்த தொழிர்சாலையில், மூன்று ஷிஃப்ட்ஸில் வேலை செய்து வருகிறது, ஆனால் தற்போது, அதன் தேவைகளை கருத்தில் கொண்டு, பிராண்ட் இங்கு இரண்டு ஷிஃப்ட்ஸில் மட்டுமே வேலை செய்கிறது.
ஐசிஇ மற்றும் இவி ப்ரொடக்ஷன் இங்கு தான் தயாரிக்கபடுகிறது
இந்த எம்ஜி ஆலையில், எம்ஜி ஹெக்டர், குளோஸ்டர், அஸ்டர் மற்றும் அதன் முதல் எலக்ட்ரிக் கார் ZS மற்றும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட காமேட் இவி ஆகியவை இங்க தான் தயாரிக்கப்படுகின்றன. அதாவது எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பதற்காக நிறுவனம் தனியாக எந்த ஒரு தொழிர்சாலையையும் தயார் செய்ய வேண்டியதில்லை.
தற்போது எம்ஜியின் ப்ரொடக்ஷன் லைனில் மட்டுமின்றி தலைமைப் பொறுப்பிலும் 24 சதவீத பெண்கள் பங்கு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. யஷ்விந்தரின் கூற்றுப்படி, நிறுவனத்தில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதற்கு காரணம் நிறுவனத்தின் நல்ல பாதுகாப்பு மற்றும் வேலை செய்வதற்க்கு ஒரு நல்ல சுற்று சூழல் ஆகும்.
எம்ஜியின் ஐசிஇ மாடல்ஸான ஹெக்டர், ஹெக்டர் ப்ளஸ், குளோஸ்டர் மற்றும் எம்ஜி அஸ்டர் ஆகியவை அடங்கும். எலக்ட்ரிக் மாடல்ஸைப் பற்றி பேசினால், பிராண்ட் ZS இவி, எம்ஜி காமேட் போன்றவற்றை நாட்டில் தற்போது விற்பனை செய்து வருகிறது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்