- ஹோண்டா எலிவேட் புக்கிங்ஜூலை 2023 இல் தொடங்கும்
- அடுத்த மூன்று ஆண்டுகளில் லான்ச் செய்யப்படும்
ஹோண்டா கார்ஸ் இந்தியா தனது அடுத்த ஏழு ஆண்டுகளுக்கான வரைபடத்தை வெளியிட்டுள்ளது. எலிவேட் மிட்-சைஸ் எஸ்யுவியை வெளியிடுவதோடு, 2030 ஆம் ஆண்டின் இறுதிக்குள் மேலும் நான்கு எஸ்யுவிஸை அறிமுகப்படுத்தும் திட்டத்தை வாகன உற்பத்தியாளர் அறிவித்துள்ளார்.
வரவிருக்கும் புதிய எஸ்யுவிஸ்
இந்தியாவில் ஹோண்டா நிறுவனம் திட்டமிட்டுள்ள ஐந்து எஸ்யுவிஸில் எலிவேட் முதன்மையானது. மேலும், அடுத்த மூன்று ஆண்டுகளில் எலிவேட்டின் எலக்ட்ரிக் வெர்ஷனை அறிமுகப்படுத்தவும் ஹோண்டா இலக்கு வைத்துள்ளது. இது ஹோண்டாவின் இரண்டாவது எஸ்யுவி. எலிவேட்டின் முதன்மை உற்பத்தி மையமாக இந்தியா இருக்கும், மேலும் அது டொமெஸ்டிக் மற்றும் க்ளோபல் மார்க்கெட்ஸில் விற்கப்படும்.
மற்ற மூன்று எஸ்யுவிஸ் குறித்து ஹோண்டா ரகசியமாக இருந்த நிலையில், வரவிருக்கும் கார்ஸ் எலக்ட்ரிக் மற்றும் ஹைப்ரிட் வாகனங்களின் கலவையாக இருக்கும் என்று பிராண்ட் உறுதிப்படுத்தியுள்ளது.
ஹோண்டா எலிவேட்
ஹூண்டாய் க்ரெட்டா, மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா மற்றும் கடுமையான மிட்-சைஸ் எஸ்யுவி உள்ள மற்ற போட்டியாளர்களுக்கு ஹோண்டாவின் பதில் எலிவேட். முன்பதிவுகள் அடுத்த மாதம் திறக்கப்பட உள்ள நிலையில், எலிவேட் வரும் மாதங்களில் பண்டிகைக் காலத்தில் அறிமுகப்படுத்தப்படும். இது பெட்ரோல் எஸ்யு மற்றும் ஏடாஸ், 10.25-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், எலக்ட்ரிக் சன்ரூஃப் மற்றும் ஃபுல்லி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
ஹோண்டா 2040க்குள் முழுவதும் எலெக்ட்ரிக் ஆக இருக்கும்
எஸ்யுவி தாக்குதலுடன், 2040 ஆம் ஆண்டுக்குள் இந்தியா உட்பட அதன் உலகளாவிய போர்ட்ஃபோலியோவை முழுவதுமாக எலெக்ட்ரிக் ஆக ஹோண்டா திட்டமிட்டுள்ளது.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்