- இந்த திட்டம் பெட்ரோல் வேரியன்ட்ஸ்க்கு மட்டுமே பொருந்தும்
- காரை விற்ற பிறகும் உத்தரவாதத்தை மாற்றுவதற்கான சாத்தியம்
தேர்ந்தெடுக்கப்பட்ட வெர்ஷன்களில் புதிய நீட்டிக்கப்பட்ட உத்தரவாத திட்டத்தை ஹோண்டா கார்ஸ் இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது. திட்டத்தின் ஒரு பகுதியாக, வாடிக்கையாளர்கள் தங்கள் உத்தரவாதத்தை வாங்கிய தேதியிலிருந்து ஏழு ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும். மேலும் என்னவென்றால், மேலே குறிப்பிட்ட காலத்தில் நீங்கள் பயணிக்கக்கூடிய கிலோமீட்டருக்கு எந்த ஒரு ரேஞ்சும் இல்லை.
எலிவேட், சிட்டி, சிட்டி இ:எச்இவி மற்றும் அமேஸ் போன்ற கார்களை உள்ளடக்கிய அதன் தற்போதைய மாடல் ரேஞ்சின் பெட்ரோல் வேரியன்ட்ஸ்க்கு இந்த நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத்தை ஹோண்டா நிறுவனம் வழங்குகிறது. இந்த திட்டம் சிவிக், ஜாஸ் மற்றும் WR-V போன்ற பிற மாடல்களின் பெட்ரோல் வெர்ஷனையும் உள்ளடக்கியது. வாடிக்கையாளர் ஏற்கனவே நீட்டிக்கப்பட்ட உத்தரவாத திட்டத்திற்கு பதிவு செய்திருந்தால் இந்த தொகுப்பு பொருந்தும்.
ஹோண்டா நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத் திட்டத்தின் ஒரு பகுதியாக, வரம்பற்ற கிலோமீட்டர் பாலிசி, ஏழு வருட கவரேஜ், நாடு தழுவிய சேவை நெட்வொர்க் மற்றும் குறிப்பிட்ட காலத்திற்குள் வாகனத்தை விற்பனை செய்யும் போது உத்தரவாதத்தை மாற்றுவது ஆகியவை சிறப்பம்சங்கள் என்று ஹோண்டா தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகளில், ஹோண்டா நிறுவனம் கடந்த மாதம் நாடு முழுவதும் எலிவேட் அபெக்ஸ் எடிஷன்னை அறிமுகப்படுத்தியது, இதன் விலை ரூ. 12.68 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). எங்களின் வெப்சைட்டில் ஸ்டாண்டர்ட் காருடன் ஒப்பிடும்போது இந்தப் வெர்ஷனில் கொண்டு வரப்பட்ட மாற்றங்களை விரிவாகக் கூறியுள்ளோம். நீங்கள் எங்கள் வெப்சைட்டை பார்வையிடலாம் மற்றும் அதைப் பற்றி முழுமையாகப் படிக்கலாம்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்