- ஜூன் மாதத்தில், நிறுவனம் அதன் எலிவேட் மாடலை வெளியிடப் போகிறது.
- பிராண்ட் 587 யூனிட்ஸை எக்ஸ்போர்ட் செய்துள்ளது
ஹோண்டா இந்தியா மே மாதத்திற்கான விற்பனை பட்டியலை அறிவித்துள்ளது. கடந்த மே மாதத்தில், ஹோண்டா டொமெஸ்டிகில் 4,660 மற்றும் 587 யூனிட்ஸை எக்ஸ்போர்ட் செய்யப்பட்டுள்ளன. தரவுகளின்படி, மே 2022 இல் நிறுவனத்தின் மொத்த டொமெஸ்டிக் விற்பனை 8,188 யூனிட்ஸ், இதில் 1,997 யூனிட்ஸ் எக்ஸ்போர்ட் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு மே மாதத்தை விட இந்த ஆண்டு மே மாத விற்பனையில் கார் தயாரிப்பு நிறுவனம் சரிவை பதிவு செய்துள்ளது.
ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் மார்கெட்டிங் அண்ட் சேல்ஸ் டைரக்டர் யுய்ச்சி முராடா கூறுகையில், “மே மாதத்திற்கான விற்பனை எங்கள் திட்டத்திற்கு ஏற்ப இருந்தது. குறிப்பாக ஹோண்டா அமேஸ் மற்றும் ஹோண்டா சிட்டி ஆகியவை இந்திய வாடிக்கையாளர்களின் விருப்பமானதாகத் தொடர்கிறது. தற்போது, எங்களின் வரவிருக்கும் எஸ்யுவி எலிவேட் காட்சிக்கு தயாராகி வருகிறது. வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெறும் என்று உறுதியாக நம்புகிறோம்” என்றார்.
எலிவேட் ஜூன் 6 ஆம் தேதி வெளியிடப்படும்
ஹோண்டா தற்போது தனது எஸ்யுவி மாடலான ஹோண்டா எலிவேட் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது, இது இம்மாதம் 6 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. ஹைப்ரிட் மோட்டார் மற்றும் ஏடாஸ் அம்சங்களை இதில் காணலாம். எலிவேட் எல்இடி ஹெட்லேம்ப்ஸ் மற்றும் டெயில்லைட்ஸ், எல்இடி டிஆர்எல்ஸ், ஷார்க்-ஃபின் ஆண்டெனா, வைப்பர் மற்றும் ரூஃப் ரெயில்ஸுடன் ரியர் வாஷர் ஆகியவற்றைப் பெறலாம். ஹோண்டா எலிவேட், கியா செல்டோஸ், டொயோட்டா ஹைரைடர், மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா, ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் ஸ்கோடா குஷாக் ஆகிய மாடல்ஸுக்கு போட்டியாக இருக்கும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்