- எலிவேட் மிட்-சைஸ் எஸ்யுவி நேற்று வெளியிடப்பட்டது
- இந்த மாடல் பண்டிகை காலத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
ஹோண்டா எலிவேட் இந்தியாவில் அறிமுகமானது
ஹோண்டா கார்ஸ் இந்தியா எலிவேட் மிட்-சைஸ் எஸ்யுவியை நேற்று வெளியிட்டது, இது உலகளாவிய அறிமுகத்தையும் குறிக்கிறது. க்ரெட்டா மற்றும் கிராண்ட் விட்டாரா போட்டியாளரின் புக்கிங் அடுத்த மாதம் தொடங்கும், அதைத் தொடர்ந்து பண்டிகைக் காலத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
ஹோண்டா எலிவேட் அடிப்படையிலான இவி வேலையில் உள்ளது
ஜப்பானிய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர், அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் எலிவேட் மிட்-சைஸ் எஸ்யுவியின் இவி வெர்ஷனை அறிமுகப்படுத்தும் திட்டத்தை உறுதிப்படுத்தினார். எனவே, எலிவேட் அடிப்படையிலான இவி 2026 முதல் வந்துவிடும் என்று எதிர்பார்க்க படுகிறது.
2030-க்குள் ஐந்து எஸ்யுவிஸை ஹோண்டா அறிமுகப்படுத்தவுள்ளது
எலிவேட் வெளியீட்டு விழாவில் பேசிய ஹோண்டா கார்ஸ் இந்தியா மேலும் 2030 ஆம் ஆண்டளவில் லோக்கல் மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தப்படும் ஐந்து எஸ்யுவி’ஸில் வேலை செய்து வருவதாக கூறியது. அடுத்த ஏழு ஆண்டுகளில் எந்த மாடலை கொண்டு வர திட்டமிட்டுள்ளோம் என்பதை கார் தயாரிப்பாளர் வெளியிடவில்லை. அடுத்த சில ஆண்டுகளில் இந்த விவரங்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கலாம்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்