- செப்டம்பர் முதல் வாரத்தில் லான்ச் செய்யப்படும்
- சிங்கிள் இன்ஜினில் வழங்கப்படுகிறது
ஹோண்டா கார் இந்தியா எலிவேட்டை 6 ஜூன் 2023 அன்று நாட்டில் வெளியிட்டது. விலைகள் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், இந்தியாவில் மிட்-சைஸ் எஸ்யுவிக்கான முன்பதிவுகளை வாகனத் தயாரிப்பாளர் ரூ.25,000 செப்டம்பரில் டெலிவரி செய்யப்படும். இப்போது, எஸ்யுவியின் அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்கு முன் வெயிட்டிங் பீரியடை நாங்கள் பெற்றுள்ளோம்.
ஹோண்டா எலிவேட் வெயிட்டிங் பீரியட்
அதன் அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்னதாக, ஃபைவ்-சீட்டர் கொண்ட எஸ்யுவி ஏற்கனவே இந்தியர்களின் பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. முன்பதிவு செய்த நாளிலிருந்து 16-18 வாரங்கள் வரை காத்திருப்பு காலத்தை எலிவேட் இப்போது கட்டளையிடுகிறது. இன்று வரை பெறப்பட்ட மொத்த முன்பதிவுகளில், 40 சதவீதம் வரை ஏற்கனவே உள்ள ஹோண்டா வாடிக்கையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹோண்டா எலிவேட் இன்ஜின் மற்றும் மைலேஜ்
எலிவேட்டில் 119bhp மற்றும் 145Nm டோர்க்கை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் ப்யூர் பெட்ரோல் மோட்டாரில் உள்ளது. இது ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் அல்லது சிவிடீ யூனிட்டுடன் ஏஆர்ஏஐ- சான்றளிக்கப்பட்ட ஃபியூல் எஃபிஷியன்சி முறையே லிட்டருக்கு 15.31 கி.மீ மற்றும் லிட்டருக்கு 16.92 கி.மீ உடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஹோண்டா எலிவேட் போட்டியாளர்கள்
சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கியா செல்டோஸ், ஹூண்டாய் க்ரெட்டா, மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர், ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வேகன் டைகுன் மற்றும் வரவிருக்கும் சிட்ரோன் C3 ஏர்கிராஸ் ஆகியவற்றுடன் எலிவேட் போட்டியிடும்.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்
ஹோண்டா எலிவேட் வீடியோ
மேலும் இது போன்ற வீடியோஸைப் பார்க்க கார்வாலே யூடியூப் சேனலுக்கு சப்ஸ்கிரைப் செய்யவும்