இந்தியாவில் எலிவேட்டின் விலைகள் செப்டம்பர் 4 அன்று வெளியிடப்படும்
முன்பதிவு ரூ. 21,000 இல் ஆரம்பிக்கும்
புதிய எலிவேட் எப்போது லான்ச் ஆகும்?
ஹோண்டா கார்ஸ் இந்தியா இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்திய மார்க்கெட்டில் எலிவேட் மிட்-சைஸ் எஸ்யுவியை வெளியிட்டது மற்றும் செப்டம்பர் 4 ஆம் தேதி விலைகளை அறிவிக்கும். க்ரெட்டா மற்றும் கிராண்ட் விட்டாராவுடன் போட்டியிடும் இந்த மாடலை தற்போது ரூ. 21,000 இல் புக் செய்யலாம்.
ஹோண்டா எலிவேட் VX வேரியண்ட் டிசைன் மற்றும் ஃபீச்சர்ஸ்
2023 எலிவேட் நாடு முழுவதும் உள்ள உள்ளூர் டீலர்ஸ்க்கு வரத் தொடங்கியுள்ளது, மேலும் சமீபத்திய படங்கள் மாடலின் VX ஏடீ வேரியண்ட்டை வெளிப்படுத்துகின்றன. எக்ஸ்டீரியர் சிறப்பம்சங்களில் ஸ்வெப்ட்பேக் ஹெட்லேம்ப்ஸ், ஒரு புதிய கிரில், எல்இடி டிஆர்எல்ஸ், ஃபாக் லைட்ஸ், ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட்ஸ், ஏ-பில்லர் பொருத்தப்பட்ட ஓஆர்விஎம்ஸ் மற்றும் டூயல்-டோன் அலோய் வீல்ஸ் ஆகியவை அடங்கும்.
உள்ளே, எலிவேட்டின் VX ஏடீ வேரியண்ட் 8 இன்ச் ஃப்ரீ ஸ்டாண்டிங் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 360 டிகிரி கேமரா, டூயல்-டோன் தீம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், எலக்ட்ரிக் சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
2023 எலிவேட் எஸ்யுவி இன்ஜின் மற்றும் விவரக்குறிப்புகள்
புதிய ஹோண்டா எலிவேட் 1.5 லிட்டர், ஐவிடெக் பெட்ரோல் இன்ஜினுடன் 119bhp மற்றும் 145Nm டோர்க்கை வெளிப்படுத்தும். டிரான்ஸ்மிஷன் விருப்பங்களில் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் யூனிட் மற்றும் சிவிடீ யூனிட் ஆகியவை அடங்கும். இதில் ஹைப்ரிட் வெர்ஷன் இல்லை என்றாலும், 2026க்குள் எலிவேட் அடிப்படையிலான இவியை ஹோண்டா அறிமுகப்படுத்தும்.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்