- எலிவேட்டின் விலைகள் செப்டம்பர் 2023 இல் அறிவிக்கப்படும்
- ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ் மற்றும் மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும்
எலிவேட் எஸ்யுவிக்கான முன்பதிவுகளை ஹோண்டா இந்தியா அதிகாரப்பூர்வமாகத் திறந்துள்ளது மற்றும் செப்டம்பர் 2023 இல் அதன் விலைகளை அறிவிக்கும். முன்பதிவுத் தொகை ரூ.21,000 மற்றும் நீங்கள் இதை வாங்க திட்டமிட்டிருந்தால், இதன் வேரியண்ட் மற்றும் வண்ண விருப்பங்களை பற்றி தெரிய படிக்கவும்.
ஹோண்டா எலிவேட்டின் வேரியண்ட் மற்றும் இன்ஜின் விருப்பங்கள்
ஹோண்டா எலிவேட் பெட்ரோல்-மட்டும் இயக்கப்படும் எஸ்யுவி மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இதில் ஹைப்ரிட் அல்லது டீசல் இன்ஜின் இல்லை மற்றும் இது பெட்ரோலில் 119bhp மற்றும் 145Nm டோர்க்கை உற்பத்தி செய்யும் வகையில் டியூன் செய்யப்பட்டுள்ளது மற்றும் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் சிவிடீ யூனிட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது.
மேனுவல் வெர்ஷன் SV, V, VX மற்றும் ZX வேரியண்ட்ஸில் இருக்க முடியும் என்றாலும், ஆட்டோமேட்டிக் ட்ரிம்ஸ் V, VX மற்றும் ZX இவை மூன்றில் மட்டுமே இருக்கும்.
ஹோண்டா எலிவேட் வண்ண விருப்பங்கள்
ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் 10 வெவ்வேறு வண்ணங்களில் எலிவேட்டைத் தேர்வு செய்யலாம். இதில் ஏழு மோனோடோன் மற்றும் மூன்று டூயல்-டோன் வண்ணங்கள் கிடைக்கும். ரேடியன்ட் ரெட், ஃபீனிக்ஸ் ஆரஞ்சு மற்றும் பிளாட்டினம் ஒயிட் ஆகியவை சிங்கள் டோனில் அல்லது கான்ட்ராஸ்டிங் பிளாக் ரூஃப் உடன் இருக்கலாம், கோல்டன் ப்ரௌன், அப்சிடியன் ப்ளூ, லூனார் சில்வர் மற்றும் மீடீஓரொய்ட் க்ரே ஆகியவை மோனோடோன் விருப்பங்களாக வழங்கப்படுகின்றன.
ஹோண்டா எலிவேட் அம்சங்கள்
எலிவேட்டில் பெரிய 10.25-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், எலக்ட்ரிக் சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான சப்போர்ட், ஆட்டோ டிம்மிங் ஐஆர்விஎம், எல்இடி ஃபோக் லைட்ஸ் மற்றும் ஏடாஸ் டெக்னாலஜி ஆகியவை உள்ளது.
ஹோண்டா எலிவேட் லான்ச் டைம்லைன் மற்றும் போட்டியாளர்கள்
எலிவேட்டுக்கான முன்பதிவு ரூ.21,000 மற்றும் ஹோண்டா டீலர்ஷிப்ஸில் அல்லது பிராண்டின் ஆஃபீஷியல் வெப்சைட் மூலம் செய்யலாம். செப்டம்பர் 2023 முதல் விலைகள் மற்றும் டெலிவரிஸ் தொடங்கும். எலிவேட் மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா, ஹூண்டாய் க்ரெட்டா, ஸ்கோடா குஷாக், எம்ஜி ஆஸ்டர், ஃபோக்ஸ்வாகன் டைகுன், டொயோட்டா ஹைரைடர் மற்றும் கியா செல்டோஸ் போன்ற மாடல்ஸ்க்கு எதிராக போட்டியிடும்.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்
ஹோண்டா எலிவேட் வீடியோ
மேலும் இது போன்ற வீடியோஸைப் பார்க்க கார்வாலே யூடியூப் சேனலுக்கு சப்ஸ்கிரைப் செய்யவும்