- இந்தியாவில் செப்டம்பர் 4, 2023 அன்று லான்ச் செய்யப்படும்
- 1.5 லிட்டர் என்ஏ பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது
ஹோண்டா இந்தியா அதன் வரவிருக்கும் எலிவேட் எஸ்யுவி மூலம் மிட்-சைஸ் எஸ்யுவி பிரிவில் நுழைகிறது. எஸ்யுவியின் விலைகள் இந்தியாவில் செப்டம்பர் 4, 2023 அன்று அறிவிக்கப்படும். SV, V, VX மற்றும் ZX ஆகிய நான்கு வேரியண்ட்ஸில் சிங்கிள் இன்ஜின் விருப்பத்துடன் இதைப் பெறலாம். அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்னதாக, V வேரியண்ட் ஒரு டீலர்ஷிப்பில் காணப்பட்டது.
ஹோண்டா எலிவேட் V வேரியண்ட் எக்ஸ்டீரியர் விவரங்கள்
படத்தில் பார்த்தபடி, எலிவேட்டின் இரண்டாவது முதல் அடிப்படை V வேரியண்ட் லூனார் சில்வர் நிறத்தில் ஸ்பை செய்யப்பட்டது. எக்ஸ்டீரியரில், V வேரியண்ட் அலோய் வீல்ஸ், ஃபோக் லேம்ப்ஸ், ரூஃப் ரெயில்ஸ் மற்றும் ரியர் வைப்பர் ஆகியவற்றை இழக்கிறது. எல்இடி ஹெட்லேம்ப்ஸ், எல்இடி டிஆர்எல்ஸ், ஷார்க்-ஃபின் ஆண்டெனா, டர்ன் இண்டிகேட்டர்ஸுடன் கூடிய எலக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓஆர்விஎம்ஸ், பாடி கலர்ட் டோர் ஹேண்டல்ஸ் மற்றும் எல்இடி டெயில்லைட்ஸ்ஆகியவை வெளிப்புற சிறப்பம்சங்களில் அடங்கும்.
எலிவேட் V வேரியண்ட்டின் ஃபீச்சர்ஸ்
அம்சங்களைப் பொறுத்தவரை, எலிவேட் V வேரியண்ட் 8 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே கனெக்டிவிட்டி, ரியர்-வியூ கேமரா, பார்க்கிங் சென்சார்ஸ் மற்றும் ஸ்டீயரிங்-மவுண்டட் கண்ட்ரோல்ஸ் ஆகியவற்றுடன் வருகிறது. இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், 60:40 ஸ்ப்ளிட் ரியர் சீட், ரியர் டிஃபாகர் மற்றும் டூயல் ஏர்பேக்ஸ் போன்ற வழங்க உள்ளன.
ஹோண்டா எலிவேட்டின் இன்ஜின் மற்றும் விவரக்குறிப்புகள்
எலிவேட் எஸ்யுவி சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் சிவிடீ யூனிட்டுடன் இணைக்கப்பட்ட 1.5-லிட்டர் என்ஏ பெட்ரோல் இன்ஜினுடன் இருக்கலாம். இந்த மோட்டார் 119bhp மற்றும் 145Nm பீக் டோர்க்கை உற்பத்தி செய்யும் வகையில் டியூன் செய்யப்பட்டுள்ளது, ஏஆர்ஏஐ மைலேஜ் லிட்டருக்கு 16.92 கி.மீ வரை கிடைக்கும்.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்