- ஹோண்டாவின் வரிசையில் எலிவேட் மூன்றாவது மாடல்
- ஃபிஃப்த் ஜெனரேஷன் ஹோண்டா சிட்டியின் இன்ஜின் மூலம் இயங்கும்
நாட்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எஸ்யுவி எலிவேட்டில் ஹோண்டா வேலை செய்து வந்தது. இந்த புதிய எஸ்யுவி இந்திய மார்க்கெட்காக உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எலிவேட்டின் வருகையுடன், ஹோண்டாவின் பட்டியலில் அமேஸ் மற்றும் சிட்டிக்குப் பிறகு மூன்றாவது வாகனத்தின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
ஹோண்டா எலிவேட் எக்ஸ்டீரியர்:
எலிவேட்டின் லூக் மற்ற ஹோண்டா வாகனங்களைப் போலவே இருக்கும். இதில் நேரான போன்னெட், ஹோரிஸோன்டல் எல்இடி டிஆர்எல்’ஸ், கவர்ச்சிகரமான எல்இடி ஹெட்லைட் மற்றும் பரந்த கிரில் ஆகியவற்றைப் பெறுகிறது. பெரிய ரூஃப் ரெயில்ஸ், ஷார்க்-ஃபின் ஆண்டெனா, 360 டிகிரி கேமரா மற்றும் தலைகீழான எல்-வடிவ எல்இடி டெயில்லைட்ஸ் ஆகியவை இதில் உள்ள முக்கிய அம்சங்களாகும்.
எலிவேட் 4,312 மிமீ நீளமும், அதன் வீல்பேஸ் 2,650 மிமீ ஆகும். இது 458 லிட்டர் பூட் ஸ்பேஸ் மற்றும் எலிவேட்டின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 220 மிமீ ஆகும்.
ஹோண்டா எலிவேட் இன்டீரியர்:
இது பிளாக் மற்றும் பெய்ஜ் டூயல் டோன் தீமிஸில் கிடைக்கிறது. பெரிய டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ஆம்பியன்ட் லைட்டிங், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் வென்டிலேடெட் சீட்ஸ் போன்ற அம்சங்களுடன் எலிவேட் வருகிறது.
ஹோண்டா எலிவேட்டின் ஏடாஸ் அம்சங்கள்:
ஆறு ஏர்பேக்ஸ், மல்டிபிள் ஆங்கிள் கேமரா மற்றும் பிரேக் அசிஸ்ட் தவிர, பாதுகாப்பை மனதில் வைத்து, இது முழு ஏடாஸ் அம்சங்களுடன் வழங்கப்படுகிறது. ஆட்டோ ஹை-பீம் அசிஸ்ட், அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், லீட் கார் டிபார்ச்சர் அலர்ட், லேன்-கீப் சிஸ்டம் மற்றும் ஆண்டி-கோலிஷன் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவை கூடுதலாகும்.
ஹோண்டா எலிவேட் இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன்:
இது ஃபிஃப்த் ஜெனரேஷன் ஹோண்டா சிட்டியின் அதே 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது, இது 119bhp மற்றும் 145Nm டோர்க்கை உருவாக்குகிறது. இதில் சிக்ஸ் ஸ்பீட் மேனுவல் மற்றும் சிவிடி யூனிட் உடன் சேர்க்கப்பட்டுள்ளன.
ஹோண்டா எலிவேட்டின் போட்டியாளர்கள்:
இந்த மாடல் ஹூண்டாய் க்ரெட்டா, மாருதி சுஸூகி கிராண்ட் விட்டாரா, கியா செல்டோஸ், டொயோட்டா ஹைரைடர், எம்ஜி ஆஸ்டர், ஃபோக்ஸ்வேகன் டைகுன் மற்றும் ஸ்கோடா குஷாக் ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும்.
ஹோண்டா எலிவேட் லான்ச்:
ஹோண்டா எலிவேட்க்கான புக்கிங்ஸ் ஜூலை 2023 இல் தொடங்கும் மற்றும் இந்த பண்டிகைக் காலத்தில் விலைகள் அறிவிக்கப்படும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்