- ஹோண்டா எலிவேட் தனது வேர்ல்ட் பிரீமியர் காட்சி இன்று டெல்லியில் நடத்தவுள்ளது
- 1.5 லிட்டர் பெட்ரோல் மோட்டார் மற்றும் ஒரு ஹைப்ரிட் வெர்ஷனும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
ஹோண்டா எலிவேட் வெளியீடு மற்றும் லான்ச் டைம்லைன்
ஹோண்டா கார்ஸ் இந்தியா லோக்கல் மார்க்கெட்டிற்க்கு ஒரு புதிய மிட்-சைஸ் எஸ்யுவியை அறிமுகப்படுத்துவதாக ஜனவரி மாதம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியது. இதைத் தொடர்ந்து பல டெஸ்ட் ம்யூல்ஸ் ஸ்பை ஷாட்ஸ் நடத்தப்பட்டன, இப்போது, மாடலின் உலகளாவிய அறிமுகம் இன்று நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து இந்த ஆண்டின் பிற்பகுதியில் பண்டிகைக் காலத்தில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய எலிவேட் எஸ்யுவி எக்ஸ்டீரியர் டிசைன்
வெளிப்புறத்தில், 2023 ஹோண்டா எலிவேட், இன்டெக்ரேட்டட் எல்இடி டிஆர்எல்ஸ, ஃபோக் லைட்ஸ், திக் ஸ்லாட் குரோம் கிரில், முன் பம்பரில் பரந்த ஏர் டாம், ஃப்ரண்ட் டோர் பொருத்தப்பட்ட ஓஆர்விஎம்ஸ், ரூஃப் ரெயில்ஸ், எலக்ட்ரிக் சன்ரூஃப் ஆகியவற்றைக் கொண்ட சிங்கிள் போட் ஹெட்லைட் வடிவமைப்பைக் கொண்டிருக்கும். ஷார்க்-ஃபின் ஆண்டெனா மற்றும் பிளாக் அலோய் வீல்ஸ். மேலும், இது ஒரு இன்டெக்ரேட்டட் ஸ்பாய்லர், ரேப்பரவுண்ட் டூ பீஸ் எல்இடி டெயில் லைட்ஸ், டெயில்கேட் பொருத்தப்பட்ட நம்பர் பிளேட் ஹோல்டர், பின்புற வைப்பர் மற்றும் வாஷர் மற்றும் பின்புற பம்பரில் ரிஃப்ளெக்டர்ஸ் ஆகியவற்றைப் பெறும்.
2023 ஹோண்டா எலிவேட் இன்டீரியர் மற்றும் ஃபீச்சர்ஸ்
புதியஎலிவேட் எஸ்யுவியில் 360 டிகிரி கேமரா, ஒரு பெரிய டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல், ஏடாஸ் மற்றும் புதிய டாஷ்போர்டு லேஅவுட் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹோண்டா எலிவேட் இன்ஜின் மற்றும் விவரக்குறிப்புகள்
ஹோண்டா எலிவேட் மிட்-சைஸ் எஸ்யுவியில் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஹைப்ரிட் மோட்டார் மூலம் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிரான்ஸ்மிஷன் விருப்பங்களில் ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் யூனிட், சிவிடீ யூனிட் மற்றும் இ-சிவிடீ யூனிட் ஆகியவை அடங்கும்.
புதிய ஹோண்டா எலிவேட் எதிர்பார்க்கப்படும் விலைகள் மற்றும் போட்டியாளர்கள்
வரவிருக்கும் ஹோண்டா எலிவேட் விலை ரூ.10-17 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). அறிமுகப்படுத்தப்பட்டதும், இந்த மாடல் ஹூண்டாய் க்ரெட்டா, மாருதி கிராண்ட் விட்டாரா, கியா செல்டோஸ், டொயோட்டா ஹைரைடர், எம்ஜி ஆஸ்டர், ஃபோக்ஸ்வேகன் டைகுன் மற்றும் ஸ்கோடா குஷாக் ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும்.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்