- நான்கு வேரியண்ட்ஸில் வழங்கப்படும்
- 1.5 லிட்டர் என்ஏ பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படும்
ஹோண்டா கார்ஸ் இந்தியா எலிவேட் எஸ்யுவியை நாட்டில் ரூ. 11 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியது. இந்த மிட்-சைஸ் எஸ்யுவி நான்கு வேரியண்ட்ஸில் சிங்கிள் இன்ஜினுடன் கிடைக்கிறது. ஜூலை மாதம் முன்பதிவு தொடங்கப்பட்ட நிலையில், க்ரெட்டா போட்டியாளரின் டெலிவரி நேற்று செப்டம்பர் 4, 2023 அன்று தொடங்கியது.
இந்தக் கட்டுரையில், இந்தியாவின் சிறந்த 10 நகரங்களில் ஹோண்டா எலிவேட்டின் ஆன்-ரோடு விலைகளைப் பட்டியலிட்டுள்ளோம்.
நகரங்கள் | எலிவேட் SV எம்டீ (பேஸ் வேரியண்ட்) | எலிவேட் ZX சிவிடீ (டாப் வேரியண்ட்) |
மும்பை | ரூ. 13.22 லட்சம் | ரூ. 19.22 லட்சம் |
சென்னை | ரூ. 11.04 லட்சம் | ரூ.16.24 லட்சம் |
கோயம்புத்தூர் | ரூ.13.41 லட்சம் | ரூ. 19.67 லட்சம் |
மதுரை | ரூ. 11.04 லட்சம் | ரூ.16.24 லட்சம் |
பெங்களூரு | ரூ. 13.63 லட்சம் | ரூ. 20.00 லட்சம் |
திருப்பூர் | ரூ. 13.41 லட்சம் | ரூ. 19.67 லட்சம் |
ஹைதராபாத் | ரூ. 13.62 லட்சம் | ரூ. 19.99 லட்சம் |
கொச்சி | ரூ. 11.04 லட்சம் | ரூ. 16.24 லட்சம் |
திருச்சிராப்பள்ளி | ரூ. 13.41 லட்சம் | ரூ. 19.67 லட்சம் |
டெல்லி | ரூ. 12.89 லட்சம் | ரூ. 18.90 லட்சம் |
எலிவேட் எஸ்யுவியின் டாப்-ஸ்பெக் ZX வேரியண்ட்டிற்குத் திட்டமிடும் வாடிக்கையாளர்கள் 10.25-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே கனெக்டிவிட்டி, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் வயர்லெஸ் சார்ஜர் போன்ற அம்சங்களைப் பெறுவார்கள். எட்டு ஸ்பீக்கர் சிஸ்டம், ஆறு ஏர்பேக்ஸ், ஆட்டோ டிம்மிங் ஐஆர்விஎம், லெதரெட் சீட் அப்ஹோல்ஸ்டரி, எலக்ட்ரிக் சன்ரூஃப், வாஷருடன் ரியர் வைப்பர், ஏடாஸ் சூட் மற்றும் பல அம்சங்கள் வழங்கப்படுகின்றன.
எலிவேட் எஸ்யுவிஆனது 1.5-லிட்டர் என்ஏ பெட்ரோல் இன்ஜினுடன் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் சிவிடீ கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார் 119bhp மற்றும் 145Nm டோர்க்கை உற்பத்தி செய்யும் வகையில் டியூன் செய்யப்பட்டுள்ளது, ஏஆர்ஏஐயின் சான்றிதல்படி இது லிட்டருக்கு 16.92 கி.மீவரையிலான ஃப்யூல் எஃபிஷியன்சியை கொண்டது.