சி-எஸ்யுவி செக்மென்ட்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எலிவேட்டை ஹோண்டா ஜூன் 6 ஆம் தேதி நாட்டில் அறிமுகப்படுத்தியது. எலிவேட்டின் இன்ஜின் மற்றும் அதன் நீளம் மற்றும் அகலத்தை ஹோண்டா அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்தக் கட்டுரையில், ஹோண்டா எலிவேட்டின் டைமென்ஷன்ஸை க்ரெட்டா மற்றும் பிற சி-செக்மென்ட்எஸ்யுவிஸுடன் ஒப்பிடப்படுகின்றன.
சி-எஸ்யுவி செக்மென்ட்டில் ஹோண்டா எலிவேட்டின் போட்டியாளர்
எலிவேட் ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஸ்கோடா குஷாக், எம்ஜி ஆஸ்டர், டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் மற்றும் மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும்.
புதிய எலிவேட்டின் நீளம் மற்றும் அகலம்
ஹோண்டா எலிவேட் 4,312 மி.மீ நீளம், 1,790 மி.மீ அகலம் மற்றும் 1,690 மி.மீ உயரம், அதன் வீல்பேஸ் 2,650 மி.மீ ஆகும்.
சி-எஸ்யுவி செக்மென்ட்டில் எலிவேட்டின் நீளம்
டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் 4,365 மி.மீ நீளம் கொண்ட இந்த செக்மென்ட்டில் மிக நீளமான வாகனமாகும், அதைத் தொடர்ந்து கிராண்ட் விட்டாரா 4,345 மி.மீ நீளம் கொண்டது. ஆஸ்டர் 4,323 மி.மீ நீளம் கொண்டது, செல்டோஸ் 4,315 மி.மீ நீளம் கொண்ட நான்காவது நீளமான வாகனம் ஆகும். இதற்குப் பிறகு, ஹோண்டாவின் புதிய எலிவேட் 4,312 மி.மீ நீளம் கொண்டது. இந்த செக்மென்ட்டின்பிரபலமான வாகனமான ஹூண்டாய் க்ரெட்டா எலிவேட்டை விட 12 மி.மீ நீளம் குறைவாக உள்ளது. குஷாக் 4,225 மி.மீ நீளமும், டைகுன் 4,221 மி.மீ நீளமும் கொண்டது.
எலிவேட் மற்றும் மீதமுள்ள சி-எஸ்யுவிஸின் அகலம்
எம்ஜி ஆஸ்டர் 1,809 மி.மீ அகலம் கொண்ட இந்த செக்மென்ட்டில் இது மிகவும் அகலமானது. இதற்குப் பிறகு, செல்டோஸ் 1800 மி.மீ மற்றும் கிராண்ட் விட்டாராவும்,அர்பன் க்ரூஸர்ரும் 1,795 மி.மீ அகலம். ஹோண்டாவின் புதிய எலிவேட் மற்றும் ஹூண்டாய் க்ரெட்டாவின் அகலம் 1,795 மி.மீக்கு இணையாக உள்ளது. டைகுன் மற்றும் குஷாக் பற்றி பேசினால், இவை இரண்டும் 1,760 மி.மீ அகலம் கொண்ட இந்த செக்மென்ட்டில் கடைசியாக உள்ளன.
2023 எலிவேட்டின் உயரம்
எலிவேட் 1,690 மி.மீ கொண்ட இந்த செக்மென்ட்டில் மிக உயரமான வாகனம் என்று உங்களுக்கு சொல்கிறோம். இரண்டாவது இடத்தில் உள்ள ஆஸ்டரின் உயரம் 1650 மி.மீ ஆகும். மேலும், கிராண்ட் விட்டாரா மற்றும் ஹைரைடர் ஆகியவை 1,645 மி.மீ உயரம் கொண்டவை. டைகுன் மற்றும் குஷாக் 1,612 மி.மீ உயரம், க்ரெட்டா மற்றும் செல்டோஸ் முறையே 1,635mm மற்றும் 1,620mm உள்ளன.
புதிய எலிவேட்டின் வீல்பேஸ்
டைகுன் மற்றும் குஷாக்கின் வீல்பேஸ் 2,651 மி.மீ என்ற செக்மென்ட்டில் மிக நீளமானது. ஹோண்டா எலிவேட் 2,650 மி.மீ வீல்பேஸ் கொண்ட பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. க்ரெட்டா மற்றும் செல்டோஸ் 2,610 மி.மீ வீல்பேஸைக் கொண்டிருந்தாலும், கிராண்ட் விட்டாரா மற்றும் அர்பன் க்ரூஸர் ஹைரைடர் இரண்டும் 2,600 மி.மீ வீல்பேஸைக் கொண்டுள்ளன. எம்ஜி ஆஸ்டரின் வீல்பேஸ் 2,585 மி.மீ இல் மிக குறைந்ததாகும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்