- இந்தியாவில் திருத்தப்பட்ட விலைகள் வரும் மாதங்களில் அறிவிக்கப்படும்
- மாடலின் முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது
ஹோண்டா எலிவேட் உற்பத்தி தொடங்குகிறது
ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் (எச்சிஐஎல்) நாட்டில் எலிவேட் மிட்-சைஸ் எஸ்யுவியின் உற்பத்தியைத் தொடங்கியுள்ளது. இந்த நிறுவனம், ரூ.21,000க்கு முன்பதிவுகளை ஏற்றுக்கொள்கிறது மற்றும் விலைகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்து, மேலும் இந்த ஆண்டு செப்டம்பரில் டெலிவரி தொடங்கும்.
எலிவேட் மிட்-சைஸ் எஸ்யுவியின் ஃபீச்சர்ஸ்
அம்சங்களைப் பொறுத்தவரை, கிராண்ட் விட்டாரா போட்டியாளரான எலிவேட், எல்இடி லைட்டிங், 16 இன்ச் டூயல்-டோன் அலோய் வீல்ஸ், புதிய கிரில், கான்ட்ராஸ்ட் நிற ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட்ஸ், எலக்ட்ரிக் சன்ரூஃப், ஹோண்டா சென்சிங் (ஏடாஸ் டெக்னாலஜி), ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ இணைப்புடன் கூடிய 10.25-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.
புதிய ஹோண்டா எலிவேட் இன்ஜின் மற்றும் விவரக்குறிப்புகள்
க்ரெட்டா போட்டியாளரான எலிவேட்டில் 1.5 லிட்டர் ஐவிடெக் பெட்ரோல் இன்ஜின் உள்ளது, இது அதிகபட்சமாக 119bhp மற்றும் 145Nm டோர்க்கை உற்பத்தி செய்கிறது. இந்த மோட்டார் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் யூனிட் மற்றும் சிவிடீ யூனிட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதில் ஹைப்ரிட் வெர்ஷன் இல்லை என்றாலும், அதற்குப் பதிலாக, எலிவேட்டின் இவி வெர்ஷனை ஹோண்டா விரைவில் வழங்கும்.
ஹோண்டாவின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் கருத்து
நிகழ்ச்சியில் பேசிய ஹோண்டா கார்ஸ் இந்தியாவின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான டகுயா ட்சுமுரா, “இந்தியாவில் உள்ள எங்களின் தபுகாரா வசதியில் நாங்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹோண்டா எலிவேட் தயாரிப்பைத் தொடங்குவது, எங்களின் எஸ்யுவி முயற்சியில் இன்று ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல். உலகளவில் வெளியிடப்பட்டதிலிருந்து, எலிவேட் நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களிடமிருந்து அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. எலிவேட்டின் வெகுஜன உற்பத்தியைத் தொடங்கிய முதல் நாடு என்பதில் நாங்கள் மிகவும் பெருமையடைகிறோம், மேலும் இது எங்கள் வணிகத்தின் முக்கிய தூணாக விரைவில் மாறும், வாடிக்கையாளர்களுடன் வலுவான தொடர்புகளை வளர்க்கும் மற்றும் எங்கள் ஹோண்டா குடும்பத்திற்கு புதிய உறுப்பினர்களை ஈர்க்கும் என்று நம்புகிறோம். வரவிருக்கும் வாய்ப்புகள் மற்றும் இந்த மாடல் எங்கள் பிராண்டில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.' என்று கூறினார்.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்
ஹோண்டா எலிவேட் வீடியோ
மேலும் இது போன்ற வீடியோஸைப் பார்க்க கார்வாலே யூடியூப் சேனலுக்கு சப்ஸ்கிரைப் செய்யவும்