- செப்டம்பர் 4 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது
- பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கும்
ஜப்பானிய வாகன உற்பத்தியாளரின் சமீபத்திய எஸ்யுவியை வாங்கும் போது இந்தியாவின் மிக முக்கியமான கேள்விகளில் ஒன்றிற்கு நாங்கள் பதிலளித்துள்ளோம்- எவ்வளவு மைலேஜ்? மேலும் இந்த மாடலின் பெட்ரோல் மேனுவல் வேரியண்ட்டின் விலை ரூ. 11.04 லட்சம் முதல் ரூ.14.94 லட்சம் வரை இருக்கும்.
ஹோண்டா எலிவேட்டின் ஏஆர்ஏஐ மைலேஜ்
ஹோண்டா எலிவேட்டின் ஏஆர்ஏஐ மைலேஜ் லிட்டருக்கு 15.31 கி.மீ என கூறுகிறது, இது 40-லிட்டர் ஃபியூல் டேங்குடன் இணைந்தால், 612 கி.மீ தூரத்தை வழங்குகிறது. இது பிரிவு எதிர்பார்ப்புகளுக்கு இணையாக உள்ளது, ஆனால் அதன் போட்டியாளர்களிடையே மிக உயர்ந்த இடத்தைப் பெறவில்லை.
ஹோண்டா எலிவேட்டின் நகர மைலேஜ்
எலிவேட் பெட்ரோல் எம்டீ உடன் எங்கள் நகர மைலேஜ் சோதனையில், லிட்டருக்கு 11.36 கி.மீ கிடைத்தது. ஒப்பிடுகையில், அதன் செடான் உடன்பிறந்த சிட்டி பெட்ரோல் எம்டீ, லிட்டருக்கு 14.1 கி.மீ மைலேஜைத் தந்தது.
ஹோண்டா எலிவேட் ஹைவே மைலேஜ்
எலிவேட் உடனான எங்கள் ஹைவே மைலேஜ் சோதனையில், லிட்டருக்கு 18.50 கி.மீ கிடைத்தது. ஒப்பிடுகையில், சிட்டி பெட்ரோல் எம்டீ ஹைவே மைலேஜ் லிட்டருக்கு 18.24 கி.மீ.
இன்ஜின் விவரக்குறிப்புகள்
ஹோண்டா எலிவேட், சிட்டி செடானை இயக்கும் அதே 1.5 லிட்டர் ஐ-விடெக் பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இரண்டு கார்ஸிலும் உள்ள இந்த இன்ஜின் 119bhp/145Nm டோர்க்கை உற்பத்தி செய்கிறது மற்றும் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் அல்லது சிவிடீ உடன் இருக்கலாம்.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்