- எலிவேட் ஒரே பெட்ரோல் இன்ஜினைப் பெறுகிறது
- ஃபியூல் எஃபிஷியன்சி விவரங்கள் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னதாக வெளிப்படுத்தப்பட்டது
ஹோண்டா எலிவேட் அறிமுகம்
எலிவேட் இந்திய மார்க்கெட்டில் ஜப்பானிய வாகன உற்பத்தியாளர்களுக்கு மிக முக்கியமான அறிமுகமாகும். இது ஜூன் 6, 2023 அன்று வெளியிடப்பட்டது, மேலும் வெளியீட்டு தேதி செப்டம்பர் முதல் வாரத்தில் திட்டமிடப்பட்டுள்ளது, அதைத் தொடர்ந்து இந்த எஸ்யுவி டெலிவரி செய்யப்படும். மேலும், அதன் அதிகாரப்பூர்வ விலை அறிவிப்புக்கு முன்னதாக, பிராண்ட் ஹோண்டா எலிவேட்டின் ஏஆர்ஏஐ- சான்றளிக்கப்பட்ட ஃபியூல் எஃபிஷியன்சிபுள்ளிவிவரங்களை வெளிப்படுத்தியது.
இன்ஜின் மற்றும் பர்ஃபார்மன்ஸ் விவரங்கள்
ஹோண்டா சிட்டி-அடிப்படையிலான எஸ்யுவி இந்தியாவில் பொறிக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது மற்றும் செடான் உடன்பிறந்தவர்களிடமிருந்து பெட்ரோல் இன்ஜினைனைப் பெறும். 1.5-லிட்டர் என்ஏ பெட்ரோல் மோட்டார் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் சிவிடீ யூனிட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் இன்ஜின் 119bhp மற்றும் 145Nm டோர்க்கை உற்பத்தி செய்ய டியூன் செய்யப்பட்டுள்ளது, ஏஆர்ஏஐ-சான்றளிக்கப்பட்ட மைலேஜ் முறையே லிட்டருக்கு 15.31கி.மீ மற்றும் லிட்டருக்கு 16.92கி.மீ மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் வடிவத்தில் உள்ளது. இதற்கிடையில், ஹோண்டா சிட்டியைப் போலல்லாமல், எலிவேட் எஸ்யுவி ஹைப்ரிட் இன்ஜினைத் நீக்கிவிட்டது.
ஹோண்டா எலிவேட் ஃபீச்சர்ஸ் மற்றும் போட்டியாளர்கள்
வரவிருக்கும் ஹோண்டா எலிவேட், ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ் மற்றும் மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா போன்ற போட்டியாளர்கள் மத்தியில் ஆதிக்கம் செலுத்தும் மிட்-சைஸ் எஸ்யுவி இடத்தில் போட்டியிடும். அம்சங்களைப் பொறுத்தவரை, இந்த ஹோண்டா எஸ்யுவி வயர்லெஸ் மொபைல் இணைப்பு, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜர், அனைத்து டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் ஆகியவற்றுடன் 10.25-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் வரும். ஸ்டீயரிங் பொருத்தப்பட்ட கண்ட்ரோல்ஸ், எலக்ட்ரிக் சன்ரூஃப் மற்றும் ஹோண்டா சென்சிங் ஏடாஸ் தொகுப்பு போன்ற அம்சங்களும் வழங்குகிறது.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்
ஹோண்டா எலிவேட் வீடியோ
மேலும் இது போன்ற வீடியோஸைப் பார்க்க கார்வாலே யூடியூப் சேனலுக்கு சப்ஸ்கிரைப் செய்யவும்